தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதியான ராசியங்காடு, சுந்தரநாயகி புரம், மங்கனங்காடு, பேய்க்கிலிக்காடு, கருங்குளம், கரிசைக்காடு, செங்கபடுத்தான்காடு, மஞ்சவயல், மறவக்காடு, வடகாடு, மேலக்காடு, தாமரங்கோட்டை வடக்கு ஆகிய ஊர்களில் உள்ள விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கல்லணை கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு பல நாட்கள் ஆகியும் வடகாடு வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட பொதுப் பணித்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இந்த பகுதி விவசாயிகளின் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டினை அடிப்படையாக வைத்து சி.பி.ஐ.எம் கிளைச் செயலாளர் இடும்பையன் தலைமையில் 300–க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:–
இந்த பகுதி விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட 350 கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டும், வாரம் முழுவதும் முறை வைக்காமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும். பொதுப் பணித்துறை அதிகாரிகள் அலட்சியத்தினால் அனுமதியின்றி திறந்து வெளியேற்றப்படும் சட்டர்களை மூட வேண்டும், வேதாபுரி ஆற்றிலிருந்து வெண்டாக்கோட்டை அணைக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிமா குளம் உள்ளிட்ட மேற்கூறிய கிராமங்களில் உள்ள ஏரி–குளங்களை நிரப்பிட வேண்டும்.
அதன் மூலம் உப்பு நீர் கலந்த நிலத்தடி நீர் மட்டத்தின் நல்ல நீராக மாற்றிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அரசு தரப்பில் வட்டாட்சியர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர் சுகேந்திரன், உதவி பொறியாளர் எழில்வேந்தன் ஆகியோர் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
தஞ்சை மாவட்ட கல்லணை கால்வாய் செயற்பொறியாளர் ரேவதி நேரில் வந்து உத்திரவாதம் கொடுத்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என உறுதியாக போராட்டகாரர்கள் கூறியதால் அவர் நேரில் வந்து போரட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.
நன்றி: மாலை மலர்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.