இந்நிலையில் மாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவடைய இருந்த நேரத்தில் அதிரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அ.தி.மு.க தொண்டர் M. மணி (வயது45), அதிரை பேரூராட்சி கவுன்சிலர் உதயகுமார், முருகானந்தம், சபியுல்லா ஆகிய 4 பேர் அங்கிருந்து எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள புதுஆற்றுபாலத்திற்கு வந்தனர்.
அப்போது M. மணி ஆற்றின் பாலத்தின் தடுப்புசுவர் மீது ஏறி, ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும். ஜெயலலிதா வாழ்க என்று கோஷமிட்டபடி ஆற்றில் குதித்தார். உடனே உடன் வந்த மற்ற 3 பேரும் அவரை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்தனர். மேலும் ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தவர்களும் ஆற்றில் குதித்து அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் மாமணியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.
தமிழன் ஒரு காட்டுமிராண்டி என்று பெரியார் சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது, தீக்குளிக்க முயற்சிக்கும் அடிமைகளே, அம்மாவால வசதியும் வாழ்க்கையும் பெற்றவங்களே அமைச்சர் பதவியை கமுக்கமா வட்சிக்கிறாங்க , யாரவது பதவி வேணாம்முன்னு சொன்னாங்களா? உங்களுக்கு என்னவந்தது?
ReplyDeleteஅறியாமையால் தன்னை மாய்த்த்துகொண்டவர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
நான் ஊரில் இருக்கும் போது எனது வீடுகளுக்கு செண்டரிங் கட்ட பெரும்பாலும் மணி அவர்களே அதிகம் வந்து வேலை செய்வார் ஒரு கை சற்றே முடியாமலும் தன் நம்பிக்கையுடன் வேலை செய்பவர் ...அன்னாரின் குடும்பத்தாருக்கு அதிரை வலைதள மக்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள் .
ReplyDelete