பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஜீவா. இவருடைய மகன் சுபாஷ் (வயது 23) எலக்ட்ரிசியன். அதே தெருவை சேர்ந்தவர் உசேன் மகன் அப்துல்அஜீஸ் (வயது 23). இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்களுக்கும் அதே தெருவை சேர்ந்த ஜாகீர் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மாலை 6.30 மணி அளவில் பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்காரத் தெரு காளியம்மன் கோவில் எதிரில் சுபாசும், அப்துல்அஜீசும் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஜாகீர் அவருடைய நண்பர்கள் தர்மராஜ், மாரிமுத்து விக்னேஷ் ஆகிய 4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்து வழி மறித்து சுபாஷ், அப்துல்அஜீஸ் ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த இருவரும் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து சுபாஷ் கொடுத்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர போலீசார் ஜாகீர், தர்மராஜ் மாரிமுத்து, விக்னேஷ் ஆகிய 4 பேர் மீதும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தேடிவருகிறார்கள்.
நன்றி : தினத்தந்தி
நன்றி : தினத்தந்தி
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.