.

Pages

Friday, September 5, 2014

பெண்கள் குழந்தைகளுக்கென்று அதிரையில் புதியதோர் உதயம் 'பிஸ்மி' பல் மருத்துவமனை !

அதிரையில் இன்று மாலை பழைய போஸ்ட் ஆபிஸ் ரோட்டில் அமைந்துள்ள மாஸ் ரெடிமேட் கடையின் எதிரே அமைந்துள்ள வளாகத்தில் புதிதாக பிஸ்மி பல் மருத்துவமனையின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவிற்கு பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் திரு. N.R. ரெங்கராஜன் MLA தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினார். இமாம் ஷாஃபி  மெட்ரிக் மேல்நிலைப்பளியின் முதல்வர் திருமதி B. ஆப்தாப் பேகம் கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார்.

முன்னதாக வர்த்தக சங்க தலைவர் K.K. ஹாஜா வரவேற்புரை நிகழ்த்தினார். இதில் உள்ளூர் பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வந்திருந்த அனைவரையும் பல் மருத்துவர் A.R. வஹிபா, அவரது கணவர் நவாஸ் மற்றும் குடும்பத்தினர் அன்புடன் வரவேற்று உபசரித்தனர். 

அதிரை வரலாற்றில் உள்ளூர் பெண்மணி ஒருவர் பல் மருத்துவராக சொந்த ஊரிலேயே தனது பணியை துவக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மருத்துவமனையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மாத்திரம் சிகிச்சை அளிக்க முடிவு செய்து இருப்பதாக தெரிவித்தனர்.







No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.