.

Pages

Thursday, September 4, 2014

பட்டுக்கோட்டையில் உள்ள தமிழக அரசின் இலவச அமரர் ஊர்தி சேவையை பயன்படுத்தி கொள்ள அழைப்பு !

தமிழக அரசு தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் இந்திய செஞ்சிலுவை சங்கம் மூலமாக மாநிலம் முழுவதும் இலவச அமரர் ஊர்தி சேவையை செயல்படுத்தி வருகிறது.
       
இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிர் இறப்புகளின் போது, இந்த அமரர் ஊர்தி சேவையை எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். இறந்தவருடைய உடலை தமிழகத்தின் எந்த ஒரு பகுதிக்கும், அவருடைய இருப்பிடத்திற்கு இதன் மூலம் கொண்டு செல்லலாம். இதற்கான சிறப்பு தொலைபேசி எண்ணாக - 155377 அறிவிக்கப்பட்டுள்ளது.
       
இதுகுறித்து தஞ்சை மாவட்ட செஞ்சிலுவை சங்க கண்காணிப்பு அதிகாரியும், தமிழ்நாடு சுகாதார திட்ட மாவட்ட அலுவலருமான டாக்டர் எம்.எட்வின் கூறுகையில் , 
"தமிழக அரசின் இந்த இலவச திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு"  கேட்டுக்கொண்டார்." தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு 8 இலவச ஆம்புலன்ஸ், கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு 1 ஆம்புலன்ஸ் வாகனமும் அரசால் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோளுக் கிணங்க பட்டுக்கோட்டைக்கு என தனியாக ஒரு அமரர் ஊர்தி ஆம்புலன்ஸ் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஃப்ரீசர் வசதியுடன் கூடிய இந்த அமரர் ஊர்தி பொதுமக்களுக்கு மிகுந்த பயனளிக்கும்" என்றார்.
           
இரண்டு தினங்களுக்கு முன் விநாயக சதுர்த்தி ஊர்வல பாதுகாப்பிற்காக வந்து முத்துப்பேட்டை அருகே பரக்கலக்கோட்டை என்ற இடத்தில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ராஜாமுகமது என்ற காவலரின் உடல் இத்திட்டத்தின் கீழ் இலவச அமரர் ஊர்தியில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
         
பட்டுக்கோட்டை டிஎஸ்பி செல்லப்பாண்டியன், சுகாதார திட்ட மாவட்ட அலுவலர் டாக்டர் எம்.எட்வின், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் பாஸ்கரன், பட்டுக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் தீபநாதன், அதிராம்பட்டினம் காவல்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து, காவலர் ராஜாமுகமது உடலை ஆம்புலன்சில் ஏற்றி அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

செய்தி: எஸ்.ஜகுபர்அலி,
பேராவூரணி.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.