குளத்தின் வடமேற்கு பகுதியில் காணப்படும் நடைமேடையிலிருந்து மணல் சரிந்து வாய்க்காலில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக செக்கடி குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்காலை விரிவாக்கம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக 3 அடி அகலமுள்ள சிமென்ட் குழாய்கள் வரவழைக்கப்பட்டு அதில் பொருத்தப்பட இருக்கிறது.
உச்சகட்டமாக நடைபெற்று வரும் பணியியினால் குளத்தின் தோற்றம் புதுப்பொலிவுடன் காட்சியளிப்பதோடு மட்டுமல்லாமல் பொதுமக்கள் பாதுகாப்பான நடை பயிற்சியை மேற்கொள்ள முடியும் என்பது அப்பகுதியினரின் கருத்தாக இருக்கிறது. மேலும் குளம் புனரமைப்பு பணி தொடர்பாக சிறந்த ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் நம்மிடம் எதிர்பார்ப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதவலுக்கும் நன்றி.
பணிகள் எல்லாம் முடியட்டும், இறுதியாக ஒன்று அவசியம் இருக்கணும், இது இல்லாது போனால், இருக்கும்படி தூண்டனும்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
{ மேலும் குளம் புனரமைப்பு பணி தொடர்பாக சிறந்த ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் நம்மிடம் எதிர்பார்ப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர் }
ReplyDeleteகுளத்தின் மையப்பகுதி அழகு படுத்த வேண்டும் அதாவது நான்கு தூண்கள் அமைத்து அதன் நடுவே குரான் வடிவமைத்து அதனை சுற்றி மின் விளக்கால் அழகு படுத்தலாம் அல்லது அதனை சுற்றி வாட்டர் பால்ஸ் அமைக்கலாம்.
நடைபாதை சிறார்கள் பயன்படுத்தக்கூடும் என்பதால் குளத்தை சுற்றி தடுப்பு கம்பி அமைக்க வேண்டும், நடைபாதை வழியே குறிப்பிட்ட இடைவெளியில் குரான் வசனங்கள் பொரித்த பிளாட் வைக்க வேண்டும் அதோடு பூ செடி தொட்டியும் ஆங்காங்கே வைக்க வேண்டும்
நடைபாதை நவீன மின் விளக்கால் அலங்கரிக்க படவேண்டும்,
மேற்சொன்னவை இடம் பெற்றால் கண்டிப்பாக குளம் ஜொலிக்கும் - மற்ற குளங்களுக்கு இது ஒரு முன்னுதாரணம்.