.

Pages

Friday, September 12, 2014

தஞ்சையில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் !

தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் கலைச்செல்வன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அவ்வப்போது நடத்தப்படுகிறது.

அதன்படி தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தஞ்சை நகரில் புதிதாக தொடங்கப்பட உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் 100 கணினி இயக்குபவர் பணிக்கான நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது.

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் அதற்கு மேலான கல்வித்தகுதியுடன் கணினி பாடத்தில் சான்றிதழ், பட்டய, பட்டப்படிப்பு கல்வித்தகுதி உடைய தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள் இந்த நேர்முக தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம். நேர்முகத்தேர்விற்கு வருகை தரும் விண்ணப்ப தாரர்கள் அனைத்து கல்விச்சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொள்ள வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே பணி நியமன ஆணை வழங்கப்படும்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.