அண்மையில் வரலாறு காணாத வெள்ளத்தால் காஷ்மீர் நிலைகுலைந்து போனது. இதனை நேரில் பார்வையிட்டு தேசிய பேரழிவு என அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு உதவும் என அறிவித்ததோடு நாட்டு மக்களும் உதவ வேண்டுகோள் விடுத்தார்.
இதனை ஏற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ரூ. 25 லட்சம் வழங்குவதாக அறிவித்தது. அதன்படி இன்று பிரதமர் நநேரந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான இ. அஹமது எம்.பி., தேசிய செயலாளரும், கேரள முன்னாள் அமைச்சருமான இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., ஆகியோர் வழங்கினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இந்த உதவிக்காக பிரதமர் பாராட்டியதோடு, பிரதமரின் நிவாரண நிதிக்கு மற்றவர்களும் தாராளமாக உதவ வேண்டும் என்றார்.
காஷ்மீர் வெள்ள நிவாரணத்தை, பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பாகுபாடின்றி கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும், நிவாரண உதவிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எப்போதும் தயாராக இருக்கும் என்றும் இ. அஹமது எம்.பி., குறிப்பிட்டார்.

இப்பத்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது சேவைகளை வெளிக்காட்டுது.
ReplyDeleteஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் பழமையான கட்சியன யாவரும் அறிவர், கட்சிக்காரர்கள் என்றைக்காவது மக்கள் பிரச்னை கையில் எடுத்து போராடியது உண்டா? அல்லது கூட்டத்தில் வெளிநடப்பு செய்தது உண்டா ? குறைந்தபட்சமாவது அரசுக்கு எதிராக குரல் கொடுத்ததுண்டா? இப்படி சொல்லிக்கொண்ட போகலாம். தேர்தல் வரும்நேரத்தில் சிறுபான்மைனர் என்று சொல்லி திராவிடக் கட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது அவர்களும் சட்டசபையில் இடமில்லை இதயத்தில் இடம்முண்டு சொல்லியே நம்சமுதாயத்தை கழக கட்சி பயன்படுத்திகொண்டது.
ReplyDeleteநேற்று தோன்றிய கட்சிக்கெல்லாம் சிறுபான்மைனர் பிரிவு ஆதரவு எங்களுக்கு உண்டுன்னு சொல்லி நம்மளை பிரிக்கிறான் ஆனா இக்கட்சி தலைவர்கள் கவலை பட்டதில்லை, இதில் இருப்பவர்களெல்லாம் பெரும் பணக்காரர்கள், வசதி படைத்தவர்கள் கழக கட்சிக்கு நன்கொடை கொடுத்து பெயர் பெற்றவர்கள். அதனால கட்சி வளரவில்லை.
பெயர் தான் லீக் செயலில் ரொம்ப வீக்.