.

Pages

Wednesday, December 3, 2014

துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் யுஏஇ தேசிய தினம் கொண்டாட்டம் !

துபாய் ஈமான் சங்கத்தின் சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தின் 43 ஆவது தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இதில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் குமார் உள்ளிட்ட‌ பலர் பெற்று கோப்பைகளை வென்றனர்.

துபாய் ஸாபில் பூங்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் ஈமான் கல்சுரல் சென்டர் சார்பில்  பொதுச் செய‌லாள‌ர் குத்தாலம் ஏ. லியாக்க‌த் அலி வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். துணை பொது செயலாளர் தாஹா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்

இந்நிக‌ழ்வில் த‌மிழ‌க‌த்தைச் சேர்ந்த‌ ப‌ல‌ர் குடும்ப‌த்துட‌ன் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பித்த‌ன‌ர். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

தமிழகத்தை சேர்ந்த  தினேஷ்குமார் உதை பந்து போட்டியில் முதலிடம் பெற்றார். மேலும் பலர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற காயிதேமில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கினைப்பாளரும் முன்னாள் எம்பியுமான அப்துல் ரஹ்மான்,விடுதலை சிறுத்தைகள் மாநில துணைப் பொதுச் செயலாளரும் எழுத்தாளருமான் ஆளூர் ஷா நவாஸ்,முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயலாளருமான மில்லத் இஸ்மாயில்,இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மாநில கல்விப்பணி செயலாளர் ஆடுதுறை ஷாஜஹான் ,ஈமான் கல்விகுழு தலைவர் பி.எஸ்.எம்.ஹபீபுல்லாஹ்,இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஊடக பிரிவு ஒருங்கினைப்பாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம், தொழிலதிபர் ஆலியா டிரேடர்ஸ் சேக் தாவூத் உள்ளிட்ட பலர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வென்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஈமார் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தனியார் நிறுவனத்தின் மேற்பார்வையாளர் மூசாவிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.