.

Pages

Monday, December 8, 2014

சிறுவயதில் வீட்டை விட்டு வெளியேறியவர் 48 ஆண்டுக்குப்பின் திரும்பி வந்த மகனால் தாய் இன்ப அதிர்ச்சி !

சென்னை: பொன்னேரி என்.ஜி.ஓ நகரை சேர்ந்தவர் கைரூன்பீவி (84). இவருக்கு 5 மகன்கள். சொந்த ஊர் மதுராந்தகம் அடுத்த இரண்யசித்தி எனும் கிராமம். இதில், இளைய மகனான ஷேக் இஸ்மாயில், 16 வயதில் திடீரென வீட்டில் இருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. கடந்த 48 ஆண்டுகளாக அவரை தேடி வந்தனர். ஆனால், அவரது தாய் மட்டும் மகன் கிடைத்து விடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தார்.இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைரூன்பீவி, தனது கணவர் சாயலில் ஒருவர் வீட்டின் அருகே வந்து நின்றதை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார். அந்த நபர், கைரூன்பீவியை அம்மா என்று அழைத்ததை கேட்டதும், 48 வருடங்களுக்கு முன் கடைசியாக கேட்ட தனது மகன் இஸ்மாயிலின் குரல்தான் என அறிந்தார். அவர் அடைந்த ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை. காணமல் போன தனது சகோதரனை கண்டதும் உடன்பிறந்தோர் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இதுபற்றி இஸ்மாயில் கூறுகையில், 
‘சிறு வயதில் வீட்டைவிட்டு வெளியேறி மும்பை சென்றேன். சிறிது காலம் இந்திய ராணுவத்தில் பணியாற்றி, ஓய்வுபெற்றேன். தற்போது, குஜராத்தில் எனக்கென ஒரு குடும்பத்தை ஏற்படுத்தி வாழ்ந்து வருகிறேன். இறப்புக்கு முன்னர் தாய் மற்றும் சகோதரர்களை காணவேண்டும் என்ற ஆவலில் மதுராந்தகம் சென்றேன். அங்குள்ள உறவினர்களிடம் விசாரித்தபோது, தாய் மற்றும் சகோதரர்கள் பொன்னேரியில் வசிப்பதாக தெரிவித்தனர். அதன்பின்னரே, இங்கு வந்து தாயை கண்டேன்‘ என்றார்.

தன் உயிர் பிரிவதற்குள் காணாமல் போன மகனை காண வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இருந்தது வீண்போகவில்லை என கைரூன்பீவி கண்ணீர் மல்க கூறினார்.

நன்றி: தினகரன்

3 comments:

  1. 48 ஆண்டுகளாக தன் தாயின் நினைவின்றி வாழ்ந்த அந்த மகன் இபொழுது வந்து பார்த்ததில் எந்த பிரோஜனமும் இல்லை. மேலும் தான் தெனக்கென்று ஒரு குடும்ப்பத்தை ஏற்படுத்தி வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார், அப்பொழுது அந்த குடும்பத்தில் அவர் தாய் இல்லையா? இது நம் மார்கத்திற்கு முற்றிலும் முரணான ஒன்று. அவர் தோற்றத்தை பார்க்கும் போது அவர் ஒரு வேஷதாரி என்று தெரிகின்றது.

    ReplyDelete
  2. இவரென்ன வனவாசமா போனாரு சரி விடுங்க குஜராத் கலவரத்திலாவது அம்மாவை தேடிவந்திருக்கலாமல்லவா? அப்பவும் வரல. மகனை பார்த்ததில் அம்மாவிற்கு அளப்பரிய சந்தோசம், மகனுக்கு இரட்டிப்பு சந்தோசம் அம்மா இருக்காங்கன்னு சொல்லி, கூட பிறந்தவங்களுக்கு சந்தோசத்தோட ........ வந்துட்டான்யா பங்காளி !!!
    அவர் மனதில் என்னென்பது அல்லாஹ் நன்கறிவான்!

    அறியா வயதில் தெரியாமல் செய்த பிழையும் வாலிப வயதில் தெரிந்து செய்த தவறு பொறுத்துக்கொள்ளும் உள்ளம் தாய், அவள் அன்பிற்கு இணை ஏதும் உண்டோ?

    பிள்ளைக்கு சோர் ஊட்ட அமாவாசைஇலும் நிலவை தேடும் ஒரே உள்ளம் அம்மா / உம்மா... சொல்லிக் கொண்டே போகலாம் .

    ReplyDelete
  3. இறைவன் கூறுகின்றான் தாயின் கால் அடியில் உன் சொர்க்கம் உள்ளது என்று, இதை தொலைத்த பாவி இவன், இவருக்கு வேண்டுமானால் 48 வருடம் சுகமாக கழிந்து இருக்கும் ஆனால் பெற்ற தாய்க்கோ பல ஆண்டுகள் தூக்கம்,உணவு இல்லாமல் கஷ்டப்பட்டு கடந்து இருக்கும். இஸ்லாமிய ஆடை அணிந்த அயோக்கியன் இவன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.