.

Pages

Wednesday, December 10, 2014

நைட்டி அணிந்து வீதிக்கு வந்தால் ₹ 500 அபராதம் !

நைட்டி போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வரும் பெண்கள் ₹ 500 அபராதம் தர வேண்டும் என்று மகாராஷ்டிராவில் ஒரு கிராமத்தில் உத்தரவு போடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பை அருகேயுள்ளது கோதிவளி என்ற கிராமம். இந்த கிராமத்தில் செயல்படும் இந்திரயானி மகிளா மண்டல் என்ற பெண்கள் அமைப்பு தனது ஆபீசுக்கு வெளியே உள்ள அறிவிப்பு பலகையில் வெளியிட்ட அறிவிப்பு கிராமத்திலுள்ள பெண்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அந்த அறிவிப்பில் கோதிவளி கிராமத்தை சேர்ந்த எந்த பெண்களாவது தங்களது வீட்டுக்கு வெளியேயோ அல்லது ரோட்டிலோ நைட்டி அணிந்தபடி தென்பட்டால் அவர்கள்  ₹ 500 அபராதம் செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெண்கள் அமைப்பை சேர்ந்த உறுப்பினர் லட்சுமி பாட்டீல் நிருபர்களிடம் கூறுகையில், 
பெண்களுக்கு எதிராக ஆண்களின் பாலியல் உணர்வு தூண்டப்பட ஆடைகள் முக்கிய காரணம். முன்பெல்லாம் எங்கள் கிராமத்தில் உடலை முழுவதுமாக மறைக்கும் வகையில் சேலை அணிவார்கள். இப்போது நைட்டி கலாச்சாரம் காட்டு தீ போல பரவி, பெண்கள் அனைவரும் நைட்டியோடு கடைகளுக்கு சாமான்கள் வாங்க வருகிறார்கள். எனவேதான் பெண்களின் மாண்பை காப்பாற்ற இதுபோன்ற அபராத முடிவுக்கு வந்துள்ளோம் என்று தெரிவித்தார்.

நன்றி: தினகரன்

1 comment:

  1. மனித மனது ஒரு குரங்கு போன்றது, அது எப்போது எவ்வாறு மாறும் என்பதை எவரும் கணிக்க இயலாது, வீட்டில் எவ்வளவோ அலும்பு செய்யும் பலரும் வெளியே கண்ணியத்துடன் நடந்துகொள்வதும், வெளியே ரௌடியிசம் செய்யும் பலர் வீட்டில் எலி மாதிரி பதுங்கி வாழ்வதும் நாம் பார்த்த உண்மை.

    பெண்களின் பாதுகாப்பை கருதி எடுக்கப் பட்ட முடிவு நல்லது தாங்கோ!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.