இதுதொடர்பாக இப்பகுதியின் கவுன்சிலர் முஹம்மது இப்ராஹீம், இப்பகுதியின் ஆர்வர்லர்கள் மின்சார வாரியத்திடம் உடனே மாற்று மின்கம்பம் நடுவதற்கு கேட்டுக்கொண்டனர். இதையடுத்து களத்தில் இறங்கிய மின்சார வாரிய அலுவலர்கள் - ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து புதிய மின் கம்பத்தை நடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். இவர்களுக்கு வேண்டிய உதவிகளை கவுன்சிலர் முஹம்மது இப்ராஹீம், இப்பகுதியை சேர்ந்த ஆர்வர்லர்கள் செய்து கொடுத்தனர்.
சுமார் 7 மணி நேர இடைவெளியில்லாத பணிக்கு பிறகு வெற்றிகரமாக புதிய மின்கம்பம் நடப்பட்டது. இதையடுத்து இந்த இணைப்பில் உள்ள அனைத்து வீட்டிற்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், கவுன்சிலர் முஹம்மது இப்ராஹீம் ஆகியோர் மின்சார வாரியத்தின் துரித நடவடிக்கையை வெகுவாக பாராட்டினர். அலுவலர் - ஊழியர்களுக்கு நன்றியும் தெரிவித்துக்கொண்டனர்.
நடப்பட்ட புதிய மின்கம்பம்:



இப்ராஹிம் அவர்களுடைய சமுதாய பணி சிறக்க வாழ்த்துக்கள் பாராட்டுகள்
ReplyDelete