.

Pages

Thursday, December 11, 2014

7 மணி நேரத்தில் புதிய மின்கம்பம் ! களப்பணியில் கவுன்சிலர் இப்ராஹீம் !!

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வது வார்டு சிஎம்பி லேன் பகுதியில் உள்ள மின்கம்பம் நள்ளிரவில் முறிந்து சாலையின் குறுக்கே சாய்ந்து கிடந்தது. இதையடுத்து எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் இருக்க இப்பகுதிக்கு செல்லும் மின் இணைப்பு உடனே துண்டிப்பு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக இப்பகுதியின் கவுன்சிலர் முஹம்மது இப்ராஹீம், இப்பகுதியின் ஆர்வர்லர்கள் மின்சார வாரியத்திடம் உடனே மாற்று மின்கம்பம் நடுவதற்கு கேட்டுக்கொண்டனர். இதையடுத்து களத்தில் இறங்கிய மின்சார வாரிய அலுவலர்கள் - ஊழியர்கள்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து புதிய மின் கம்பத்தை நடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். இவர்களுக்கு வேண்டிய உதவிகளை கவுன்சிலர் முஹம்மது இப்ராஹீம், இப்பகுதியை சேர்ந்த ஆர்வர்லர்கள் செய்து கொடுத்தனர்.

சுமார் 7 மணி நேர இடைவெளியில்லாத பணிக்கு பிறகு வெற்றிகரமாக புதிய மின்கம்பம் நடப்பட்டது. இதையடுத்து இந்த இணைப்பில் உள்ள அனைத்து வீட்டிற்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.

இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், கவுன்சிலர் முஹம்மது இப்ராஹீம் ஆகியோர் மின்சார வாரியத்தின் துரித நடவடிக்கையை வெகுவாக பாராட்டினர். அலுவலர் - ஊழியர்களுக்கு நன்றியும் தெரிவித்துக்கொண்டனர்.

நடப்பட்ட புதிய மின்கம்பம்:


1 comment:

  1. இப்ராஹிம் அவர்களுடைய சமுதாய பணி சிறக்க வாழ்த்துக்கள் பாராட்டுகள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.