மரணித்த மையித்துகளை சில மணிநேரங்களில் நாம் அடக்கம் செய்துவிடுகிறோம். இதில் எந்த சிரமமும் ஏற்படுவதில்லை.
ஆனால் மழைக்காலங்களில் மைய்ய வாடிகளில் 'கப்ர்' குழி தோண்டுவதிலிருந்து, மையித்துகளை அடக்கம் செய்வது வரை குழியில் தண்ணீர் தேங்குவதால் ஏற்படும் சிரமங்களை நாம் பல காலமாக கண்டு வருகிறோம்.
இவ்வருடம் பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் இதே சிரமத்தை பல மையித்துகளை அடக்கம் செய்யும்போது உணர முடிந்தது.
இதனை தவிர்க்க ஏதேனும் வழி செய்ய வேண்டும் என்று பலரும் கருதுகின்றனர்.
இதற்காக தண்ணீர் புகாத தாற்காலிக டெண்ட் (கூடாரம்) பயன்படுத்தும் முறை சிறந்ததாகக் கருதப்படுகிறது.
அதாவது மழைக்காலங்களில், அல்லது தொடர் மழை பெய்துகொண்டு இருக்கும்போது, மையித் அடக்கம் செய்யும் சூழல் ஏற்படும்போது, இதுபோன்ற தாற்காலிக கூடாரங்களை உபயோகப்படுத்தலாம்.
அதன்படி ஒவ்வொரு மைய வாடிக்கு உரிய பள்ளிகளிலோ அல்லது மைய வாடிகளிலோ ஒரு பகுதியை உறுவாக்கி (டெண்ட் பாதுகாப்பாக இருக்க) அங்கேயே வைத்து மழைக்காலங்களில் மையித்துகளை அடக்கம் செய்யும்போது குழி வெட்டுவது முதல், அடக்கம் செய்வது வரை இந்த தற்காலிக கூடாரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
இதற்காக உள்ளூர் சமூக ஆர்வலர்களும், பள்ளிவாசல் நிர்வாகிகளும், மற்றும் ஊர் செல்வந்தர்களும் கலந்து ஆலோசித்து செயல்படுத்தலாம் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது.


அவசியமான கோரிக்கை எனினும் மார்க்க அறிஞர்களின் வழிகாட்டுதல் படி அந்தந்த பள்ளிகளின் நிர்வாக கமிட்டியினர் இதற்குரிய முயற்சியில் இறங்க வேண்டும்.
ReplyDeleteநல்ல யோசனை.
ReplyDelete