முத்துப்பேட்டையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பேரூராட்சி அலுவலகம் அருகில் சீமான் கலந்துக்கொண்டு பேசும் கொடியேற்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக ஒன்றிய செயலாளர் செல்வம் விழா ஏற்பாடுகளை கடந்த 10 தினங்களாக செய்து வந்தார். இதற்கு காவல் துறை அனுமதி வாங்க முத்துப்பேட்டை காவல் நிலையம் செல்வம் கடந்த வாரம் சென்றபோது டி.எஸ்.பி.யிடம் அனுமதி வாங்கும் படி திருப்பி அனுப்பி உள்ளனர். பின்னர் டி.எஸ்.பி.கணபதியிடம் அனுமதி கோரிய கடிதம் கொடுத்துவிட்டு நிகழ்ச்சி ஏற்பாடுகளை செல்வம் கவணித்து வந்தார். இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததாக கூறி மனுவை போலீசார் திருப்பி கொடுத்தனர். இருந்தாலும் திட்டமிட்டப்படி நிகழ்ச்சி நடைபெறும், சீமான் பேசுவார் என்று ஒன்றிய செயலாளர் செல்வம் அறிவித்தார். அதன்படி போலீஸ் தடையை மீறி பேரூராட்சி அருகில் புதியதாக கொடி கம்பம் மேடை கட்டப்பட்டும், கொடி தோரணங்கள் கட்டப்பட்டு வரவேற்பு டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டது. இதனை கண்ட போலீசார் நேற்று முன்தினம் இரவு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து எல்லாவற்றையும் அகற்றிக்கொள்ளுபடி உத்தரவிட்டனர். அதற்கு நிர்வாகிகள் அகற்ற முடியாது என்று மறுத்தனர். இந்த நிலையில் நேற்று காலை பா.ஜ.கவினர் இந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சீமான் பேசினால் தகராறு செய்வோம் என்று கூறி நிகழ்ச்சி நடைபெறும் அருகே கூட்டமாக கூடினர். இதனால் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் பா.ஜ.க தொண்டர்களை சமாதானம் படுத்தினார். பின்னர் நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் செல்வத்தை அழைத்து நிகழ்ச்சியில் பா.ஜ.கவை விமர்சிக்க கூடாது என்று வேண்டுகோள் வைத்துவிட்டு சென்றார். பெரும் பரபரப்பாக காணப்பட்ட நேரத்தில் பகல் ஒரு மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சீமான் வந்து கொடி ஏற்றி வைத்தார். பின்னர் தொண்டர்களுடன் கட்சியின் கொள்கை உறுதி மொழியை ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு தொண்டர்களுடன் படம் எடுத்துக்கொண்ட சீமான் ஏற்பாடு செய்யப்பட்ட மைக்கில் எதும் பேசாமல் காரில் ஏறி திருத்துறைப்பூண்டியில் நடைபெறும் அடுத்த நிகழ்ச்சிக்கு சென்றார். பெரிய பிரச்சனைகள் ஏதும் நடக்குமோ? என்று அச்சத்தில் பொதுமக்களும் போலீசாரும் காணப்பட்டனர். சீமான் ஏதும் பேசாமல் சென்றதால் அவர்களின் குழப்பம் தீர்ந்தது.
படம் செய்தி:
1. கொடி ஏற்றிய சீமான்.
2. பா.ஜ.க தொண்டர்களை சமாதானம் படுத்திய மாநில துணைத் தலைவர் கருப்பு முருகாணந்தம்.
3. பா.ஜ.க தொண்டர்களை சமாதானம் படுத்திய போலீசார்
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
படம் செய்தி:
1. கொடி ஏற்றிய சீமான்.
2. பா.ஜ.க தொண்டர்களை சமாதானம் படுத்திய மாநில துணைத் தலைவர் கருப்பு முருகாணந்தம்.
3. பா.ஜ.க தொண்டர்களை சமாதானம் படுத்திய போலீசார்
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை



No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.