.

Pages

Friday, December 5, 2014

அதிரை ஈசிஆர் சாலையில் மாடு குறுக்கே புகுந்ததால் விபத்து ! ஒருவருக்கு காயம் !!

அதிரை பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டை சேர்ந்தவர் உமர் ஜாஃபர். இவருடைய மகன் அபூபக்கர் ( வயது 35 ). இன்று  மாலை தனது இருசக்கர வாகனத்தில் ஈசிஆர் சாலையில் சென்றுகொண்டிருந்தார். வாகனம் கரையூர்தெரு பெட்ரோல் பங்க் அருகே வந்த போது சாலையின் குறுக்கே திடீரென மாடு புகுந்தது. இதில் நிலை தடுமாறிய அபூபக்கர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானார். இதில் முகத்தில் காயங்கள் ஏற்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அருகில் நின்றவர்கள் தமுமுக ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மயங்கிய நிலையில் கிடந்த அபூபக்கரை சிகிச்சைக்காக அதிரை அரசு மருத்துவமனைக்கு ஏற்றிசென்றது. அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிரை ஈசிஆர் சாலையில் கேட்பாரற்று சுற்றி திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இவற்றை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 comment:

  1. மாலை நேரங்களில் சுமார் 6-30pm க்கு ECR சாலை மாடுகளின் தொழுவம்மாக காட்சி தருகின்றது குறிப்பாக KMC அருகில் தினமும் கானலாம் இதற்க்கு போக்குவரத்து சம்மந்தப்பட்ட காவல்துறை நெறிப்படுத்தி நிரந்தர பாதுகாப்பான பயனத்திற்க்கு வழி செய்தால் இதுப்போன்ற விபத்துகளை தவிர்க்கலாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.