.

Pages

Tuesday, December 16, 2014

பர பர பணியில் அதிரை பேரூராட்சி !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு பகுதியில் காணப்படும் குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் அப்பகுதியின் சாலையோரத்தில் புதைக்கப்பட்ட குழாய் மூலம் வெளியேறி வந்தது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு குழாயில் ஏற்பட்ட உடைப்பால், இதிலிருந்து கழிவு நீர் வெளியேறி பழைய போஸ்ட் ஆபீஸ் பகுதியின் பிராதன சாலையில் ஓடிக்கொண்டிருந்த்தால் இப்பகுதியின் வார்த்தகர்கள் - குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். வெளியேறி வரும் கழிவுநீர் துர் நாற்றம் வீசி வருவதாகவும் கூறப்பட்டது.

இதுதொடர்பாக அதிரை பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்நிலையில் இன்று காலை அதிரை பேரூராட்சியின் சார்பில் துப்புரவு மேற்பார்வையாளர் நாடிமுத்துவின் மேற்பார்வையில் உடைந்த வடிகாலை சீர் செய்யும் பணிகளில் துப்புரவு பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். துரித நடவடிக்கை மேற்கொண்ட பேரூராட்சியை இப்பகுதியினர் பாராட்டினர்.

1 comment:

  1. ஹலோ எங்க ஊர் தலைவரே!! இந்த 11வது வார்டு அதிரையில் தான் இருகின்றது (அதாவது உங்கள் தொகுதியில் தான் இருகின்றது தலைவரே) என்பதை உங்களுக்கு ஞாபகம் படுத்த வேண்டியதாக இருகின்றது.. அது என்னமோ உங்களுக்கு எங்கள் வார்டு கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது. நாங்களும் எத்துனை தடவ தான் சார் உங்ககிட்ட வந்து முறையிடறது.

    நீங்கள் தேர்தல் நேரத்தில் கூறியது போல், எங்களுக்கு சின்ன சிங்கபுரெல்லாம் ஆக்கவேணாம் கொஞ்சம் அந்த சாக்கடைக்கு தோண்டுன கல்லையும், சாக்கடையும், ரோடு போட்டு தந்து , தண்ணீர் பற்றாகுறை இல்லாமல் இருந்தாலே போதுமானது சார்.

    இப்படிக்கு,

    அப்துல் மாஜித்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.