நள்ளிரவில் இப்பகுதியின் வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மின்கம்பத்தில் பலமாக மோதியதே விபத்திற்கான காரணம் என கூறப்படுகிறது. மேலும் மின்கம்பம் சாய்ந்த இடத்தில் வாகனத்தின் பின்புறமுள்ள இன்டிகேட்டார் விளக்கின் உடைந்த துகள்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நள்ளிரவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் இப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
Thursday, December 11, 2014
நள்ளிரவில் வாகனம் மோதியதில் சிஎம்பி லேன் பகுதி மின்கம்பம் முறிந்து கீழே சாய்ந்தது ! பெரும் விபத்து தவிர்ப்பு !
நள்ளிரவில் இப்பகுதியின் வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மின்கம்பத்தில் பலமாக மோதியதே விபத்திற்கான காரணம் என கூறப்படுகிறது. மேலும் மின்கம்பம் சாய்ந்த இடத்தில் வாகனத்தின் பின்புறமுள்ள இன்டிகேட்டார் விளக்கின் உடைந்த துகள்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நள்ளிரவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் இப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
3 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.




இந்த மாதிரி அதிரையில் பல இடங்களில் மின்சாரக்கம்பம் பளுதாகி நிலை உள்ளது அந்த அந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் முன்எச்சரிக்கையாக மின்சார வாரியத்திற்கு மனு கொடுக்கனும்
ReplyDeleteநாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் பெரிய விபத்து தவிர்க்கப் பட்டுள்ளது எனலாம், ஊரில் அதிக மின்கம்பம் பழுதான நிலைமையில் உள்ளது மின்வாரியத்திடம் முறையிட்டாலும் உரிய காலத்தில் நடவடிக்கை இல்லை, விபத்துக்குள்ளான பிறகு நாம் அழைத்து இவர்கள் வருகிறார்கள் என்றால் இவர்களென்ன மருத்துவரா?
ReplyDelete1992 ல் அதிக மின்தடை நம்வூரில் நடந்தது அப்போது ஜனாப் சிராஜுதீன் அவர்களின் தலைமையில் தெருவாசிகளை அழைத்துக் கொண்டு பழைய போஸ்டாபீஸ் எதிரே அமைந்த மின்வாரியத்துக்கு சென்றார்கள். மக்கள் பிரச்சனைகளை அன்பான முறையில் எடுத்து சொல்லியும், தெனாவட்டாக பேசிய அதிகாரிக்கு விஜயகாந்து ஸ்டைலில் விட்டார் பளார் !!!!. பிறகு பெரிய பிரச்சனையாக மாறியதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள், அந்த சம்பவம் இன்றைய காலக் கட்டத்தில் நினைத்து பார்க்க வேண்டியுள்ளது.
மக்களுக்கு சேவை பண்ண தான் அதிகாரிகள் இவர்கள் கடமை தவறும் பட்சத்தில் நாம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கக் கூடாது.
மின்சார வாரியத்துக்கு பணம் கட்டலேன்ன பியூஷ் பிடுங்குறாங்க ஆனால் நாம் அலட்சியமா பொது விசியத்தில் இருக்கோம், மின்சாரம் தாக்கி உயிர் சேதம் ஏற்பட்டால் எந்த அதிகாரியும் வருத்த படமாட்டான் !!
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
அது அதிரை மின் வாரிய இணைப்பின் இருபதாவது மின் மாற்றியின் இணைப்ப்பின் உள்ள மின் கம்பமாகும்.
பொது மக்களுக்கு எந்த வித பாதிப்பு இல்லை என்றும், மேலும் இனம் தெரியாத வாகனத்தினால் ஏற்பட்ட பழுது என்றும், மின் வாரிய தலைமை லைன் மேன் ஆகிய திரு.முருகேஷ் அவர்கள் தகவல் தந்துள்ளார்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com