.

Pages

Sunday, March 26, 2017

துபாயில் ஜீடெக்ஸ் ஷாப்பர் நிகழ்ச்சியையொட்டி 1 மணிநேரம் கூடுதல் மெட்ரோ சேவை !

அதிரை நியூஸ்: மார்ச்-26
வளைகுடா பிராந்தியத்திலேயே மிகப்பெரும் மின்சாதனங்களின் சில்லறை வர்த்தகத் திருவிழா என வர்ணிக்கப்படும் 'ஜீடெக்ஸ் ஷாப்பர் ஸ்ப்ரிங்' எதிர்வரும் மார்ச் 29 அன்று துவங்கி ஏப்ரல் 1 அன்று நிறைவடையவுள்ளது. (GITEX Shopper is the region’s biggest consumer electronics event with power retailers and world class brands)

இந்த கண்காட்சி நடைபெறும் 4 நாட்களும் அலைமோதும் பயணிகளின் வசதிக்காக ரெட் மற்றும் கிரீன் லைன் மெட்ரோ சேவைகள் கூடுதலாக 1 மணிநேரம் இயக்கப்படும் என துபை போக்குவரத்துத் துறை (RTA) முதலில் அறிவித்திருந்தது. அதன்படி அதிகாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும் சேவை நள்ளிரவு 1 மணிவரை நீடிக்கும்.

என்றாலும், துபை போக்குவரத்து துறை கடைசியாக டிவிட்டர் வழியாக அறிவித்துள்ளபடி இந்த தற்காலிக கூடுதல் சேவை நேரம் மார்ச் 29 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய இருதினங்களுக்கு மட்டுமே எனவும், இடையிலுள்ள மார்;ச் 30, 31 ஆகிய தேதிகளில் வழமையான சேவையே இருக்கும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.