.

Pages

Sunday, March 26, 2017

25 வருட தொடர் முயற்சிக்குப் பின் டிரைவிங் லைசென்ஸ் !

அதிரை நியூஸ்: மார்ச்-26
வெளிநாடுகளில் ஓட்டுனர் உரிமம் பெறுவதென்பது மிகக்கடினம் என்பதை அரபு நாடுகளில் லைசென்ஸ் பெற்றவர்கள், பெற முயற்சித்துக் கொண்டுள்ளவர்கள் அறிவர்.

இங்கிலாந்து, சவுத் யார்க்ஷையர், பார்ன்ஸ்லே பகுதியை சேர்ந்தவர் கிருஸ்டியன் ஒயிட்லி எனும் 42 வயதுடைய தனியார் நிறுவன மேலாளர். இவர் 1992 ஆம் ஆண்டு டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளில் 33 முறை தோல்வியடைந்து, சுமார் 10,000 யூரோக்களுக்கு மேல் செலவழித்ததுடன் 14 பேர் வாகன ஒட்டும் பயிற்சியும் அளித்துள்ளனர் என்றாலும் தோல்வி, தோல்வி, தோல்வியே மிஞ்சியது.

இடையில் தனக்கு பயிற்சியளித்த ஒருவர் 'இனிமேல் நீ முயற்சிக்காதே, இதுக்கு நீ சரிப்பட்டு வர மாட்டே' எனவும் ஊக்க(?)மளித்துள்ளார், அதிலும் ஒரு பெண் பயிற்சியாளருக்கு இவரை கண்டாலே பிடிக்காதாம், கட்டாயம் பெயில் தானாம்.

இப்படியாக, வேதாளம் மீண்டும் மீண்டும் முருங்கை மர ஏறினாலும் விக்கிரமாதித்தனாக நின்று வென்று அசத்தியுள்ளார். அவர் பாஸானதை அவராலேயே நம்ப முடியாவில்லையாம்.... ஷாக் அடித்த பிரமையில் உள்ளாராம்.

Source: mirror.co.uk
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.