.

Pages

Monday, March 27, 2017

அதிரை ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டில் ரூ.3.50 லட்சம் மதிப்பில் மெகா பரிசுக் குலுக்கல் விழா ( படங்கள் )

அதிராம்பட்டினம், மார்ச்-27
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை சாலையில் உலக தரத்தில் அமைந்துள்ள ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட் 2 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 3.50 லட்சம் மதிப்பீட்டில் 10 சிறப்பு பரிசுகள், 100 ஆறுதல் பரிசுகள் அடங்கிய மெகா பரிசு குலுக்கல் போட்டியை கடந்த அன்று அறிவித்தது. இதில் ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டில் ரூ.500 க்கு உணவருந்திய வாடிக்கையாளர்களுக்கு தலா ஒரு டோக்கன் வீதம் வழங்கப்பட்டது. மொத்தம் 8,300 டோக்கன் வழங்கப்பட்டது. இதன் குலுக்கல் விழா இன்று (27-03-2017 ) திங்கட்கிழமை மாலை ரிச்வே கார்டன் - கதீஜா மஹாலில் நடைபெற்றது.

விழாவிற்கு அல்-நூர் ஹஜ் சர்வீஸ் இந்தியா பி(லிட் ) மற்றும் ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட் நிறுவனர் ஹாஜி எம்.எஸ் முகமது அலி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன் குழுக்களை தொடங்கி வைத்தார். காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர் குழுக்கள் குறித்து அறிமுக உரை நிகழ்த்தி குழுக்களை வழிநடத்தினார். காதிர் முகைதீன் கல்லூரி பொருளியல் துறை தலைவர் மேஜர் எஸ்.பி கணபதி வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் கலந்துகொண்ட குழந்தைகள் மேடைக்கு அழைத்து பயனாளிகள் தேர்வு நடத்தப்பட்டது. 

முதல் பரிசு: வினோத்குமார், பெங்களூர் ( ஹீரோ ஸ்பெளண்டர் பைக் )
இரண்டாம் பரிசு : சேக்தாவூது, முத்துப்பேட்டை ( டிவிஎஸ் ஸ்கூட்டி பைக் )
மூன்றாம் பரிசு: ஷனா, அதிரை ( எல்.சி.டி டிவி )
நான்காம் பரிசு: ஷரீன், முத்துப்பேட்டை  ( ப்ரீஜ் ) 
ஐந்தாம் பரிசு: ஜலாலுதீன், திருத்துறைப்பூண்டி ( வாஷிங்மெஷின்  ) 
ஆறாம் பரிசு: ஐயப்பன், பட்டுக்கோட்டை ( சாம்சங் மொபைல் ) 
ஏழாம் பரிசு: ஆமினா அம்மாள், அரசர் குளம் ( மிக்சி )
எட்டாம் பரிசு: பாலாஜி, பட்டுக்கோட்டை ( எலெக்ட்ரிக் ஸ்டவ் ) 
ஒன்பதாம் பரிசு: சபீதா விஜயராகவன், துவரங்குறிச்சி ( மைக்ரோவேவ் ஓவன் ) 
பத்தாம் பரிசு: முபிதா, அதிரை ( குக்கர் )

ஆறுதல் பரிசு : 100 பேர்கள்

ஆகிய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவ்விழாவில் வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டனர். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் அனைவரும் ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

2 comments:

  1. சுவையான செய்தி.

    ReplyDelete
  2. Rich people's function ...function of rich way...good business...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.