.

Pages

Saturday, March 18, 2017

அபுதாபியில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் 'கட்அவுட்'!

அதிரை நியூஸ்: மார்ச்-18
அடம்பிடிக்கும் குழந்தைகளை அமைதிப்படுத்த 'பூச்சாண்டி' காட்டுவோம் அல்லவா ஆனால் பெரியவர்களை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்? இருக்கவே இருக்கு 'கட்அவுட்'டால் செய்யப்பட்ட கார் என கண்டுபிடித்துள்ளது அபுதாபி போலீஸ்.

அமீரக நெடுஞ்சாலைகளில் அதிகபட்சம் 120 கி.மீ வரை செல்ல அனுமதியுள்ளது ஆனாலும் 140 கி.மீ என்ற அதிகபட்ச வேகத்தை எட்டும் வரை ரேடார் கேமிரா மன்னித்து விடும். இதனால் பலரும் கண்மூடித்தனமான வேகத்தில் செல்வதும், வழியில் போக்குவரத்து போலீஸாரின் வாகனத்தை பார்த்தால் பம்முவதுமாக இருப்பர்.

போலீஸ் வாகனத்தை பார்க்கும் போது மட்டும் பம்மும் ஒட்டுனர்களை கட்டுப்படுத்த அவர்களின் வழியிலேயே சென்று சிந்தித்ததன் விளைவே 'கட்அவுட் போலீஸ் கார்' எனும் டம்மி போலீஸ் வண்டி. தத்ரூபமாக கட்அவுட் மூலம் செய்யப்பட்டு சைரன் விளக்குகள் பொருத்தப்பட்டு முக்கிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் நிறுத்தப்பட்டிருக்கும். இதை பார்க்கும் வாகன ஓட்டுனர்கள் தங்களின் அதீத வாகன வேகத்தை குறைத்து நல்ல பிள்ளை போல் மெதுவாக செல்வர், இதனால் தேவையற்ற பல விபத்துக்கள் தவிர்க்கப்படுகிறதாம்.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.