.

Pages

Saturday, March 18, 2017

ஹஜ் செய்திகள்: இந்த வருட ஹஜ் யாத்திரைக்கு ஈரானியர்கள் மீண்டும் அனுமதி

அதிரை நியூஸ்: மார்ச்-18
முஸ்லீம்களின் புனித யாத்திரையான ஹஜ் கடமைகளை நிறைவேற்ற ஈரானியர்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டு வருகின்றதையொட்டி ஆண்டுதோறும் சுமார் 60,000 பேர் அந்நாட்டிலிருந்து வருகை தந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு புனித மண்ணில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற தேவையற்ற நிபந்தனைகளை விதித்து ஹஜ் யாத்திரையை ஈரானிய அரசு புறக்கணித்ததால் ஈரானியர்கள் யாரும் நேரடியாக பங்குபெற முடியாமல் போனாலும் உலகெங்கும் பரந்து வாழும் ஈரானியர்களில் கணிசமானோர் கலந்து கொண்டனர்.

ஹஜ் யாத்திரைகளின் போது நடைபெறும் சில விபத்துக்கள் மற்றும் அசம்பாவித சம்பவங்களின் பின்னனியில் ஈரானியர்களே இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது மேலும் சிரியா, ஏமன், ஈராக் மற்றும் பஹ்ரைன் போன்ற முஸ்லீம் நாடுகளில் நடைபெறும் முஸ்லீம்களுக்கு எதிரான ஷியா தீவிரவாத குழுக்கள் மற்றும் அரசுகளுக்கு பகிரங்கமாகவே ஈரானிய அரசு உதவி வருகின்ற நிலையிலும் சவுதி அரசு பெருந்தன்மையாக அனுமதி வழங்கியுள்ளது.

எனினும், உலகெங்கிலிருந்தும் வரும் புனித ஹஜ் யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வண்ணம் ஈரானியர்கள் மீதான கூடுதல் கண்காணிப்பிற்கும் சவுதி அரசு போதிய ஏற்பாடுகளை செய்யும் என நம்புகிறோம்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.