.

Pages

Sunday, March 26, 2017

அமெரிக்காவில் முதல் விபத்தை சந்தித்த டிரைவர் இல்லா டேக்ஸி !

அதிரை நியூஸ்: மார்ச்-26
டிரைவர் இல்லா தானியங்கி வாகன பரிசோதனை ஓட்டங்கள் உலகின் பல நாடுகளிலும் நடைபெற்று வருகின்ற நிலையில் சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகள் டேக்ஸி சேவைகளையும் நடத்தி வருகின்றது.

இந்த தானியங்கி வாகனங்கள் விபத்தினை தவிர்ப்பதற்குரிய உயர் தொழிற்நுட்பத் திறனுடன் தயாரிக்கப்பட்டும், கம்ப்யூட்டர்களின் தொடர் கண்காணிப்பின் கீழும் இயக்கப்படுகின்றன. இத்தகைய வாகனங்களின் சேவை வெற்றிபெற்றால் 2030 ஆம் ஆண்டுகளில் சுமார் 25 சதவிகித வாகனங்கள் டிரைவர் இல்லா சேவைக்கு மாறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த முதலாவது விபத்து நிகழ்ந்துள்ளது.

உலகின் முன்னனி வாடகை கார் நிறுவனங்களில் ஒன்றான உபேர் (Uber) டேக்ஸி நிறுவனம் அமெரிக்காவின் அரிசோனா (Arizona) மாநிலம் டெம்பே (Tempe) எனும் பகுதியிலும் வால்வோ SUV ரக நவீன கார்களை கொண்டு டேக்ஸி சேவை வழங்கி வருகின்றது, இந்தக் கார்களில் ஒன்றே தற்போது சாலையில் திரும்பும் போது (டிரைவரால் இயக்கப்பட்ட) மற்றொரு காரால் மோதித் தள்ளப்பட்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தை தொடர்ந்து உபேர் நிறுவனம் தனது தானியங்கி டேக்ஸி சேவையை வாபஸ் பெற்றுள்ளதுடன் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. இவ்விபத்தால் உயிர் பலியோ, பெருங்காயங்களோ ஏற்படவில்லை என்றும் இலைமறை காயாக விளக்கமளித்துள்ளது.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.