.

Pages

Tuesday, March 21, 2017

தஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு !

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள
அட்டை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரே மாதிரியான அடையாள அட்டை பெற்றிட அருகாமையில் இருக்கும் கணினி மையங்களில் ( http://www.swaylambancard.gov.in ) இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து அதற்கான ஒப்புதல் ரசீதினை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் 2005-ஆம் ஆண்டு முதல் உடலியக்க குறைபாடுடையோர், காது கேளாத வாய்பேச இயலாதோர், பார்வையற்றோர், மனவளர்ச்சிக் குன்றியோர் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோர், மன நலம் குன்றியோர், புற உலக சிந்தனையற்றோர் மற்றும் பல்வகை மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.  அவ்வாறு அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரே மாதிரியான அடையாள அட்டை ( Universal Disability Identity Card ) பெற்றிட தங்களது  மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, சாதி சான்று, குடும்ப அட்டை அல்லது ஆதார் அட்டை, தற்போதைய புகைப்படம், கையொப்பம் (அல்லது) கைவிரல் ரேகை ஆகியவற்றின் ஒளி நகலுடன் அருகாமையில் இருக்கும்கணினி மையங்களில் ( http://www.swaylambancard.gov.in ) என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து அதற்கான ஒப்புதல் ரசீதினை பெற்றுக் கொள்ளலாம் எனவும்,

மேலும் விவரங்களுக்கு தஞ்சாவூர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண் 16ல் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ (தொலைபேசி 04362-236791) தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாற்றுத்திறனாளிகள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.