.

Pages

Saturday, March 18, 2017

துபாய் முழுவதும் 200 மின்-கார் சார்ஜிங் ஸ்டேசன்கள் நிறுவப்பட்டன

அதிரை நியூஸ்: மார்ச்-18
துபாயில் புகை மாசிலிருந்து சற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும், பெட்ரோல் இல்லா மாற்றுவழி சக்தியின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்குடனும் பல்வேறு முன்முயற்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மின்சக்தியில் இயங்கும் கார்களுக்கான பேட்டரி சார்ஜிங் ஸ்டேசன் வசதிகளும் துபை முழுவதும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன, தற்போது வரை 200 நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

சுத்தமான எரிசக்தி துபை 2050 (Dubai Clean Energy 2050) என்ற நீண்டகாலத் திட்டத்தின் கீழ், துபையின் அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக மின்சக்தி (Fully Electrical) அல்லது மின் மற்றும் பெட்ரோல் கலப்பில் (Hybrid Cars) இயங்கும் வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களும் இத்தகைய திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிப்பதன் மூலம் 2021 ஆம் ஆண்டிற்குள் சுமார் 16 சதவிகித புகை மாசு கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் விலையை விட குறைவான இம்மின்சக்தி சராசரியாக கிலோவாட் (Kw/h) ஒன்று 27 காசுகள் மட்டுமே. உதாரணத்திற்கு, ரினோல்ட் மின் காரை (Renault Electrical Car) சுமார் 1 மணிநேரம் சார்ஜ் செய்தால் 7 திர்ஹம் மட்டுமே செலுத்த நேரிடும். இச்சக்தியை கொண்டு சுமார் 130 கி.மீ பயணம் செய்ய முடியும்.

துபையில் மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகத்திற்கு பொறுப்பான DEWA நிறுவனம் சுமார் 20 முதல் 40 நிமிடங்களுக்குள் சார்ஜ் செய்யும் வகையில் 3 வகையான 'அதிவிரைவு' மின்சார சார்ஜிங் (Fast Charging Stations) நிலையங்களை நிறுவியுள்ளது. பெட்ரோல் நிலையங்களில் பொருத்தப்பட்டிருக்கும் இவற்றில் 3 வகையான பிளக்குகள் (Plugs) இருக்கும். 1 வது பிளக் 48 கிலோவாட் திறனுடனும், 2 வது பிளக் மாறுதிசை மின்னோட்டத்திற்கான (AC) ஜாடிமோ பிளக் (Alternating Charging CHAdeMO Plugs) , 3 வது பிளக் நேரடி மின்சாரத்திற்கான (DC Current Combo plugs) காம்போ பிளக் வகையை சேர்ந்ததாகவும் இருக்கும்.

நடுநிலை வேகத்தில் (Medium charging stations) அதாவது 2 முதல் 4 மணிநேரத்திற்குள் சார்ஜ் செய்யும் வசதிகள் ஷாப்பிங் மால்கள், பூங்காக்கள், அரசு அலுவலகங்களின் வாடிக்கையாளர் சேவை மையங்களிலும் இத்தகைய சார்ஜிங் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு பொருத்தப்பட்டுள்ள 2 பிளக்குகளிலிருந்தும் 22 கிலோவாட் மின்கல சேமிப்பை மாறுதிசை மின்னோட்ட (AC current) அடிப்படையில் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.