.

Pages

Sunday, March 19, 2017

அமீரகத்தில் 'டூ' (Du) தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு !

அதிரை நியூஸ்: மார்ச்-19
அமீரகத்தில் இயங்கும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான 'டூ'வின் சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளதால் இன்று காலை 9 மணிமுதல் அதன் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

டூ நிறுவனத்தால் வழங்கப்படும் சேவைகளான மொபைல் தொடர்பு, லேண்ட்லைன் தொடர்பு, இன்டெர்நெட் சேவைகள், வைபை சேவைகள் என அனைத்தும் முடங்கியுள்ளன. சிலர் கடந்த வெள்ளிக்கிழமை முதலே இத்தகைய பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்திற்கொண்டு வருத்தம் தெரிவித்துள்ள 'டூ' நிறுவனம் சேவையில் ஏற்பட்டுள்ள தடங்கலை நீக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இயல்புநிலை திரும்பும் என அறிக்கை வெளியிட்டிருந்தாலும் குறிப்பிட்ட கால அளவு எதையும் தெரிவிக்கவில்லை.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.