.

Pages

Friday, March 24, 2017

ஏப்-2, 30 தேதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் தீவிர போலியோ சொட்டு மருந்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படுவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (24.03.2017) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.  வருகின்ற 2.04.2017 மற்றும் 30.04.2017 ஆகிய இரண்டு நாட்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 2,50,240 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

நகர பகுதிகளில் 128 மையங்களும், ஊரக பகுதிகளில் 1382 மையங்களும், ஆக மொத்தம் 1510 மையங்கள் அமைக்கப்பட்டு 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படவுள்ளது. இப்பணிக்கு 6,040 சொட்டு மருந்து வழங்கும் பணியாளர்களும், 178 மேற்பார்வையாளர்களும் மற்றும் 120 மருத்துவ அலுவலர்களும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிக் கூடங்கள், அரசு மருத்துவ மனைகள், தனியார் மருத்துவ மனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், கோவில்கள், சுங்கச்சாவடிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டு காலை 7.00 மணி முதல் சொட்டு மருந்து வழங்கப்படும்.

51 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். போலியோ தடுப்பு மருந்து தயாரிக்கப்படும் இடத்திலிருந்து குழந்தையை சென்று அடையும் வரை தடுப்பு மருந்து வீரியம் குறையாமல் குளிர்பதன தொடர் (Cold Chain) மூலம் பாதுகாக்கப்படுகிறது.

2.04.2017 அன்று பிறந்த குழந்தைகளுக்கும் மேலும் இதற்கு முன் எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு கொடுத்திருந்தாலும் இந்த முகாமில் கூடுதல் தவணையாக கட்டாயம் சொட்டு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த போலியோ சொட்டு மருந்து அரசின் மூலமாக முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

வேலை நிமித்தமாக காரணமாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து தற்காலிக இம்மாவட்டத்தில் தங்கியிருப்பவர்களின் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும். எனவே, போலியோ நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இரண்டு சொட்டு போலியோ சொட்டு மருந்து தங்கள் குழந்தைகளுக்கு தவறாமல் போட்டுக் கொள்ளுமாறு இந்த வாய்ப்பை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் சுப்பிரமணி, அனைத்து ஆரம்ப சுகாதாரத மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.