.

Pages

Monday, March 20, 2017

இலவச தாய் - சேய் வாகனம் (102) மற்றும் அவசரகால வாகனம் (108) சேவையை ஆட்சியர் தொடங்கி வைத்தார் !

தஞ்சாவூர் மாவட்டத்தில் 20 ஆம்புலன்சுகளும் மற்றும் 2 பைக் ஆம்புலன்சுகளும் இயங்கி வருகின்றன. தற்போது மேலும் வெண்டிடேல்டர், டி-   பிஃபிரிடிலேட்டர், மல்டி பாரா மானிட்டர் மற்றும் ஸ்ட்ரெட்சர்களும் போன்ற வசதிகளுடன் கூடிய ஒரு 108 ஆம்புலன்சும், தேசிய நல்வாழ்வு திட்டம் - தமிழ்நாடு சுகாதாரத்திட்டம்  - இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளையின் மூலம், இலவச தாய் சேய் வாகனம் ( JSSK ) இந்தியன் ரெட்சிராஸ் சொசைட்டி தஞ்சாவூர் மாவட்ட கிளைக்கு TN58G0068 என்ற வாகனத்தையும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று திங்கட்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த வாகனம் மூலம் அரசு தாய்சேய் மருத்துவமனையில் பிரசவித்த தாய் மற்றும் குழந்தைகள். அதன் பின்னர் ஒரு வருடத்திற்கு தடுப்பூசிக்காகவும் மற்றும் குழந்தைகளை மருத்துவமனையில் இருந்து அவர்களது இல்லத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்லவும் பயன்படுத்தப்படுகிறது, இது முற்றிலும் இலவச சேவையாகும்,

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேகரன், மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் வனிதாமணி, தஞ்சாவூர் சுகதாரப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ஜே. சேகர், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் சுப்பிரமணியன், திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எட்வின். இந்தியன் செஞ்சிலுவைச் சங்கத்தலைவர் ராஜமாணிக்கம். செயலாளர் டாக்டர். யூ. ஜோசப், பொருளாளர் முத்துக்குமார் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.