அதிராம்பட்டினம், மார்ச்-20
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை மற்றும் சென்னை காயிதே மில்லத் இன்டர்நேஷனல் அகாதெமி ஆஃப் மீடியா ஸ்டடீஸ் இணைந்து இதழியல் பயிலரங்கம் நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் திங்கட்கிழமை நடைபெற்றது.
பயிலரங்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமை வகித்தார். பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் வரவேற்று, அறிமுக உரை நிகழ்த்தினார்.
பயிலரங்கில் சிறப்பு விருந்தினராக சென்னை காயிதே மில்லத் கல்லூரி பேராசிரியர் ஜே. ஹாஜா கனி கலந்துகொண்டு பேசுகையில்;
'மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதா ஒரு பொறியியாளர் ஆவார். மின்னணு வாக்குப் பதிவு இயந்திர வடிவமைப்பில் இவரது பங்கு பெரிதும் உண்டு. இவரைப்போன்று மாணவ, மாணவிகள் தொழிற்படிப்போடு இதழியல் தொடர்பான கல்வியையும் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியக் கல்வி கற்பதன் மூலம், மொழிபெயர்ப்பு மற்றும் எழுத்துப்பிழை திருத்துனர் உள்ளிட்ட வேலை வாய்ப்புகள் எளிதாகப் பெற முடியும். இதழியல் துறையில் நேர்மையுடன் பணியாற்றினால் நிறைய சாதிக்கலாம்' என்றார்.
மேலும் தி இந்து தமிழ் நாளிதழ் துணை ஆசிரியர் டி.நீதிராஜன், சென்னை காயிதே மில்லத் கல்லூரி ஊடகவியல் பேராசிரியர் ஏ.அப்துல் சலாம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். பயிலரங்கில் மாணவ, மாணவிகள் ஊடகம் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார்கள்.
பயிலரங்க முடிவில் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் ஏ. கலீல் ரஹ்மான் நன்றி கூறினார். இப்பயிலரங்க நிகழ்ச்சியில் ்பட்டிமன்ற பேச்சாளர் அண்ணா சிங்காரவேலு, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.