.

Pages

Friday, March 24, 2017

அஞ்சலகத்தில் ரூ.50 ல் சேமிப்பு கணக்கு துவக்கிய பயனாளிக்கு ATM கார்டு, பாஸ் புத்தகம் !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தஞ்சாவூர் அஞ்சலக கோட்டம் சார்பில் அஞ்சலக சிறு சேமிப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் அஞ்சலக சேமிப்பு கணக்கு துவக்கியவர்களுக்கு அஞ்சலக கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் வழங்கினார்.

இம்முகாமில் அஞ்சலக சிறு சேமிப்பு கணக்குகள், அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் மாண்புமிகு பாரத பிரதமரின் ஓய்வூதிய திட்டங்கள் போன்ற அஞ்சலக சேமிப்பு மற்றும் திட்டங்கள் தொடர்பான முகாம் மாவட்ட ஆட்சியரக பணியாளர்கள், பொது மக்கள் திரளனார் கலந்து கொண்டனர்.

சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு குறைந்தபட்ச இருப்புத்தொகை ரூ.50 ஆகும். கணக்கு தொடங்கியவுடன் ஏடிஎம் கார்டுடன் அஞ்சலக கணக்கு புத்தகம் உடனடியாக வழங்கப்படும். பொன் மகன் பொது வைப்புத்திட்டம், தொடர் வைப்புக் கணக்கு போன்ற வசதிகளும் அஞ்சலகத்தில் உள்ளது.

இம்முகாமில் அஞ்சலக உதவி கண்காணிப்பாளர் பசுபதி, மெயில் ஓவர்சீயர் அய்யாக்கண்ணு, மக்கள் தொடர்பு அதிகாரி கே.நீலவண்ணன் யாதவ், அலுவலக ஊழியர்கள் மீரா, சரண்யா, வெற்றிசெல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.