தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் புதுத்தெருவை சேர்ந்தவர் நெய்னா முகமது (45). வாகன ஓட்டுனர். இவருக்கு மனைவி, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு படிக்கும் 2 மகள்கள், 1 மகன் ஷாஹின் (2 ) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
குழந்தை ஷாஹினுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தஞ்சை தனியார் மருத்துவமனையில் மருத்துவரிடம் பரிசோதனை செய்ததில் உப்பு நீர் அதிகரித்து இருப்பது தெரியவந்தது. இதனால் குழந்தையின் உடல் பருமன் அதிகரித்து, அடிக்கடி சளி, இழப்பு ஏற்படுவதும், கிட்னி பாதிப்படைந்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து குழந்தையின் தொடர் மருத்துவ சிகிச்சைக்காக இதுவரையில் பலரிடம் கடன் வாங்கி ரூ. 1 லட்சம் வரை செலவு செய்து உள்ளதாகவும், குடும்ப வாழ்வாதத்திற்காக தான் ஓட்டி வந்த வாகனம் திடீர் பழுது ஏற்பட்டதால் ஒர்க்ஸ் ஷாப்பில் நிறுத்தப்பட்டு சிலவாரங்கள் ஆகியும் தன்னால் கட்டணம் செலுத்திவிட்டு மீட்க முடியாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மருத்துவரின் அறிவுரையின் பேரில் குழந்தைக்கு மாதம் ஒருமுறை ஊசி போடுவதற்கு ரூ. 4,500 வரை செலவு ஆகி வருவதாகவும், ஏழ்மை நிலையில் இருக்கும் தன்னால் மருத்துவ சிகிச்சை தொடர முடியாமல் தவித்து வருவதாக வருத்தத்துடன் தெரிவித்தார்.
இந்த குழந்தையின் தொடர் மருத்துவ சிகிச்சை செலவினங்களுக்காக குழந்தையின் தகப்பனார் நம்மிடம் உதவி கோரி உள்ளார்.
இக்குழந்தைக்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக நெய்னா முகமது அவர்களிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள குழந்தையின் தகப்பனார் நெய்னா முகமது அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினம் நிதி சார்ந்த சேவை அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மஹல்லா சங்கத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.
நிதி உதவி கோரி குழந்தையின் தகப்பனார் நம்மிடம் வழங்கிய வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : NAINA MOHAMED. A
Bank Name : STATE BANK OF INDIA
Branch : ADIRAMPATTINAM BRANCH
A/C No. 20295534117
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 0091 9865753637
பட்ச மண்ணுக்கு இவ்வளவு கொடுமையா? கேட்பதற்க்கே மனதை பதைபதைக்குது வல்ல இறைவன் இக்குழந்தையை காப்பாற்ற உதவி செய்வதோடு நாம் துவா செய்வோம், பூரண குணமடைய உதவி கரம் நீட்டுவோம்.
ReplyDelete