.

Pages

Friday, March 24, 2017

அதிரை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரின் கனிவான வேண்டுகோள் !

அதிராம்பட்டினம், மார்ச்-24
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் அதிராம்பட்டினம் கிளை துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன.எங்கள் சங்கத்தின் முக்கிய குறிக்கோள் அதிராம்பட்டினம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளையும் கட்டறிந்து அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையை பெற்றுத்தரும் பணியில் எமது சங்கம் முழுவீச்சில் இறங்கியுள்ளது.

தற்பொழுது  மத்திய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தியா முழுவதும் செல்லதக்க பல்நோக்கு சிறப்பு அடையாள அட்டையை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க மாற்றுத்திறனாளிகளின் விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய கோரியுள்ளது. ஆனால் அவ்விரங்களை இணையத்தில் பதிவு செய்வதுகான எந்த முன்னேற்பாடுகளையும் மத்திய மாநில அரசுகள் இதுவரை செய்யவில்லை.

ஆகவே, எமது சங்கத்தில் 23-03-2017 அன்று நடைபெற்ற சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்நோக்கு அடையாள அட்டைக்கு இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எமது சங்கம் தொடங்கப்பட்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலும் ஊர் பொதுமக்கள், ஜமாத்தார்கள் நன்கொடையாக வழங்கிய நிதியை கொண்டு சங்கத்தின் கட்டிட பராமரிப்பு பணிகளுக்காக ஒரு குறிப்பிட்ட தொகை செலவு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, மாற்றுத்திறனாளிகளின் விவரங்ளை இணையத்தில் பதிவு செய்ய கணிப்பொறி (Computer), அச்சுப்பொறி (Printer) மற்றும் வருடி (Scanner) போன்ற பொருள்கள் வாங்குவதற்கு உரிய பொருளாதார நிதி தேவைப்படுகிறது. அந்த பொருள்களை வாங்குவதற்கான விலைப்பட்டியல் வாங்கப்பட்டுள்ளது.

ஆகவே, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் பாதுகாவலர்கள், சமூக ஆர்வலர்கள், ஊர் நல விரும்பிகள், ஊர் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வெளிநாடு வாழ் நண்பர்கள் அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களின் துயர் போக்கிட தாராளமாக நிதி உதவி செய்து மாற்றுத்திறனாளிகள் நிலை உயர எங்களுக்கு ஆலோசனை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு
தமிழநாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்.
25/G, கடைத்தெரு, கிராணி மளிகை பின்புறம், அதிராம்பட்டினம்

சங்க நிர்வாகிகள்:
தலைவர்    :  M.பஹாத் முகமது   கைபேசி  எண்  :  9865939831
செயலாளர்  :  M.முகமது  ராவுத்தர்  கைபேசி  எண் :  9842585483
பொருலாளர் :  H.ஜலீல் முகைதீன்  கைபேசி  எண்  :  9500435245

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் வங்கி கணக்கு விவரம்:
பெயர்   :   Bahath Mohamed.A & Jaleel Mohaideen. H
வங்கி கணக்கு எண்   :  36147018630
வங்கியின் பெயர்   :   State Bank of India
கிளை பெயர்   :   Adirampattinam Branch
IFSC Code   : SBIN0014370

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.