அதிரை நியூஸ்: மார்ச்-27
ஐக்கிய அரபு அமீரகம், அல் அய்ன் நகரில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 11 இந்தியர்கள் பாகிஸ்தானியர் ஒருவரை அடித்து கொன்றனர். இந்த சம்பவம் 2015 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது.
வழக்கின் முடிவில் ஒருவரைத் தவிர எஞ்சிய 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து 'சர்பத் ட பாலா' என்ற அறக்கட்டளையின் சேர்மன் ஓபராய் என்பவர் இந்த கொலை குற்றவாளிகளை விடுவிக்க இந்திய தூதரகத்துடன் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
ஓபராய் அவர்களிடம் பணியாற்றும் பாகிஸ்தான் ஊழியர் ஒருவரை பெஷாவர் நகருக்கு அனுப்பி கொலையுண்ட பாகிஸ்தானியின் குடும்பத்தினரை சமதானப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியதை தொடர்ந்து மனமிரங்கிய கொலையுண்டவரின் தந்தை, என்னைப் போல் அந்த 10 பேரின் குடும்பமும் தங்களது பிள்ளைகளை இழந்து வாடக்கூடாது என்று கூறி அவர்களை மன்னித்தார்.
பாகிஸ்தானியரின் தந்தை இதற்காகவே பாகிஸ்தானிலிருந்து வருகை தந்து அல் அய்ன் கோர்ட்டிலும் ஆஜராகி தனது மன்னிப்பை உறுதி செய்ததை தொடர்ந்து இந்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், இந்த 10 பேரும் விடுதலையாவது உறுதியாகியுள்ளதாக இந்திய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.