.

Pages

Thursday, March 23, 2017

அதிரை ஈசிஆர் சாலையில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 8 பேர் காயம் ! ( படங்கள் )

அதிராம்பட்டினம், மார்ச்-23
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே ஈசிஆர் சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நிகழ்ந்த வாகன விபத்தில் 8 பேர் காயம்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தை சேர்ந்தவர் சிவக்குமார் ( 54 ) இவர் தனது குடும்பத்தினருடன் காரில் இராமேஸ்வரம் கோவில் வழிபாட்டை புதன்கிழமை இரவு முடித்துவிட்டு ஈசிஆர் சாலை வழியாக காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு சனிஸ்வரன் கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தார்.

இன்று வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அதிராம்பட்டினம் அருகே உள்ள ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் உறுப்பு கல்லூரி அருகே கார் வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த 4 பெண்கள் உட்பட 8 பேருக்கும் காயங்கள் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.