.

Pages

Monday, March 27, 2017

அதிரையில் BSNL சார்பில் இலவச சிம்கார்டு வழங்கும் முகாம் !

அதிராம்பட்டினம், மார்ச்-27
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பி.எஸ்.என்.எல் நிறுவனம் சார்பில் இலவச சிம்கார்டு வழங்கும் முகாம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு என்.எப்.டி.இ - பிஎஸ்என்எல் மாவட்ட செயலாளர் கே. கிள்ளிவளவன் தலைமையில் சி.நாடிமுத்து, கிருஷ்ணமூர்த்தி, சுந்தர்ராஜ், செல்வகுமார், தீபன், பாலு, வேம்பு உள்ளிட்ட அதிராம்பட்டினம் பிஎஸ்என்எல் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் புதிய வாடிக்கையாளர்களுக்கு சிம் கார்டுகளை வழங்கினர்.

முகாமில் குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் புகைப்படம் ஆகியவற்றை வழங்கி சிம்கார்டுகளை வாடிக்கையாளர்கள் பெற்றனர். முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. முகாமில் 200 வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவையில் புதிதாக இணைந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.