அதிராம்பட்டினம், மார்ச்-18
மனிதநேய மக்கள் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் சார்பில் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அதிரை பேரூர் தமுமுக/மமக தலைவர் எஸ்.எம் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலர் அதிரை அகமது ஹாஜா, மமக மாவட்ட செயலர் எம். கஃபார், மாவட்ட பொருளாளர் எம்.ஓ. செய்யது முகமது புஹாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் கோவை செய்யது கலந்துகொண்டு பேசினார். மேலும் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில அமைப்புச் செயலர்கள் வழக்குரைஞர் ஐ.எம் பாதுஷா, வழக்குரைஞர் சரவணபாண்டியன், அக்கட்சியின் தலைமை பேச்சாளர் திருச்சி ரபீக் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
தீர்மானங்கள்:
1. அதிரையில் விற்பனையாகும் கஞ்சா போதை பொருளை தடை செய்து விற்பனையாளர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையை கேட்டுக்கொள்வது எனவும்,
2. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையை அதிரையில் தடை செய்து விற்பனையாளர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையை கேட்டுக்கொள்வது எனவும்.
3. அதிராம்பட்டினம் பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க அரசை வலியுறுத்துவது எனவும்.
4. அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் அவர்களுக்கு அரசு வாகனம் உடனடியாக வழங்க அரசை வலியுறுத்துவது எனவும்,
5. அதிராம்பட்டினத்தில் இருந்து, மதுக்கூர் வழியாக மன்னார்குடி சென்று வர நேரடி அரசு பேருந்து இயக்க சம்பந்தப்பட்ட அரசுத்துறையை கேட்டுக்கொள்வது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்களை தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலர் அதிரை அகமது ஹாஜா வாசித்தார். தொடக்கத்தில் மமக அதிரை பேரூர் செயலர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது வரவேற்று பேசினார். கூட்ட முடிவில் தமுமுக/மமக அதிரை பேரூர் பொருளாளர் எஸ். முகமது யூசுப் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில், அக்கட்சியின் அமீரக அல்-அய்ன் மண்டல பொருளாளர் அ.அ அப்துல் ரஹ்மான், தமுமுக அதிரை பேரூர் செயலர் எம். கமாலுதீன், துணை செயலர்கள் ஏ.முகமது சேக், எம்.தமீமுல் அன்சாரி, மமக அதிரை பேரூர் துணை செயலர்கள் எஸ்.எஸ். சேக்காதி, எஸ்.பீர் முகமது, வர்த்தக அணி செயலர் எம் நெய்னா முகமது, தொழிலாளர் அணி செயலர் ஜே. ஹக்கீம், மருத்துவ அணி செயலர் ஏ. அஹ்லன் கலீஃபா, ஊடகப் பிரிவு செயலர் எம்.ஆர் முகமது ஹாலிது, சமூக நீதி மாணவ பேரவை செயலர் எஸ். அசாருதீன், மமக இளைஞர் அணி செயலர் ஏ. ராஜிக் அகமது, ஐ.பி.பி அதிரை பேரூர் செயலர் எம். சாகுல் ஹமீது, தமுமுக தொண்டர் அணி செயலர் என்.எம் முகமது கனி, சுற்றுச்சூழல் அணி செயலர் எம்.ஒய் அசாருதீன் உட்பட அதிகமானோர் கலந்துகொண்டனர்.
பொதுக்கூட்ட துளிகள்:
1. முன்னதாக மமக செயல்வீரர்கள் கடைத்தெரு கட்சி அலுவலகத்திலிருந்து பேரணியாக அணிவகுத்து பேருந்து நிலைய பொதுக்கூட்ட மேடைக்கு வந்தனர்.
2. பொதுக்கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் கூட்டணி கட்சியினர் குறிப்பாக திமுக அதிரை பேரூர் செயலர் இராம. குணசேகரன் தலைமையில் திமுகவினர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமையில் அக்கட்சியினர் கலந்துகொண்டனர்.
3. ஜல்கோபியா 'மூலிகை டீ' பொதுக்கூட்ட பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. சிலர் 2, 3 மூலிகை டீயை விரும்பி கேட்டு அருந்தினர்.
4. பொதுக்கூட்டத்தில் மமக இளைஞர் அணியினர் இருக்கை வசதி, மூலிகை டீ வழங்குவது உள்ளிட்ட பணிகளில் ஆர்வமாக ஈடுபட்டனர்.
5. நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் நேரடி ஒலிப்பரப்பு செய்யப்பட்டன.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.