தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் தங்களுடைய ஆதார் எண்ணை வங்கி சேமிப்புக் கணக்குடன் இணைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களான உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம், மானியம், ஊக்கத் தொகைகள் ஆகியவை பயனாளிகளின் வங்கிக் கணக்கு மூலம் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், இப்பயன்களைப் பெற வங்கி வாடிக்கையாளர்கள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்கில் இணைக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே, வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆதார் எண்ணை தங்களது வங்கிக் கணக்கில் இணைப்பதற்கு வங்கி கிளை மேலாளரை அணுக வேண்டும்.
மேலும், ஏடிஎம் அட்டை பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், ஏடிஎம் மையம் மூலமாகவும், இணைய வங்கி வசதி உள்ள வாடிக்கையாளர்கள் தங்களது இணைய வங்கிக் கணக்கு மூலமாகவும் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க முடியும்.
மற்ற வாடிக்கையாளர்கள் வங்கியின் கிளை, வங்கி வணிகத் தொடர்பாளரை அணுகி ஆதார், செல்லிடப்பேசி எண்ணைத் தங்கள் வங்கிக் கணக்கில் இணைக்க வேண்டும்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.