.

Pages

Saturday, March 25, 2017

காதிர் முகைதீன் கல்லூரியில் வேதியியல் மன்ற ஆண்டு விழா ( படங்கள் )

அதிராம்பட்டினம், மார்ச்-25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் வேதியியல் துறையின் மன்ற ஆண்டு விழா கல்லூரி அரங்கில் சனிக்கிழமை  நடைபெற்றது.

விழாவிற்கு வேதியியல் துறைத் தலைவர் முகமது சிராஜுதீன் தலைமை வகித்தார். மன்றச் செயலர் பேராசிரியர் என்.எம்.ஐ அல்ஹாஜி வரவேற்றுப் பேசினார். கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன் வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் கலந்துகொண்டு பேசுகையில்; 
'ஒழுக்க நெறிமுறையோடு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, ஆக்கப்பூர்வமான அலைப்பேசி இணையப் பயன்பாடு ஆகியவை மாணவ, மாணவிகளின் வாழ்வியல் வெற்றிக்கு வழி வகுக்கும். தங்களுக்கென ஒரு தனித்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்தத் தனித்துவம் பல்வேறு நிலைகளில் தங்களை உயர்த்தும்' என்றார்.

விழாவில் மாணவ, மாணவிகள் பங்குபெற்ற அறிவியல் சார்ந்த தொழில்நுட்பம் சாதனையா ? அல்லது வேதனையா ? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பேச்சு, பாட்டு, புதுக்கவிதை மற்றும் வினாடி வினா ஆகிய அறிவுத்திறன் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு, இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் துறைப் பேராசிரியர்கள் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவி மற்றும் ஊக்கத்தொகை ரூ. 11 ஆயிரம் வழங்கப்பட்டது.

விழாவில் கல்லூரி பேராசிரியர்கள் ஜி.ஏ. செய்யது தமீம், எஸ். ராஜா முகம்மது, என்.ஏ முகம்மது பாரூக், எம். பிரேம் நவாஸ், எம். பழனிவேல் மாணவர்களை வாழ்த்திப் பேசினார்கள். விழா முடிவில் பேராசிரியை ஏ.அப்ரூஸ் பானு நன்றி கூறினார்.

இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக, ஆய்வகப்பணியாளர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.







 


 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.