.

Pages

Wednesday, March 22, 2017

அபுதாபியில் கார் ஸ்டண்ட் வித்தையில் ஈடுபட்ட இளைஞர் கைது !

அதிரை நியூஸ்: மார்ச்-22
அபுதாபியில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் ஒரு பள்ளிக்கூடத்தின் அருகே கார் ஸ்டண்ட் எனப்படும் வித்தைக் காட்டுதலில் ஈடுபட்டதால் அவருடைய வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் நின்றிருந்த ஒருவரையும் மோதித் தள்ளியது. இந்த குற்றத்தையும் செய்துவிட்டு இதை மொபைலில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றி பரப்பியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அந்த இளைஞரை கைது செய்ததுடன் அவரது நம்பர் பிளேட் இல்லாத காரையும் கைப்பற்றினர். மேலும், சீரற்ற சீதோஷ்ண நிலவும் இந்நேரத்தில் இதுபோன்ற ஆபத்தான வாகன ஸ்டண்டில் ஈடுபட்டதற்காக அவரது பெற்றோரையும் அழைத்து கடுமையாக எச்சரித்ததுடன் அதிக தண்டனைகள் பெறக்கூடிய சட்டங்களின் கீழ் வழக்கும் பதிந்துள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.