.

Pages

Sunday, March 26, 2017

சவூதியில் பொது மன்னிப்பு அறிவிப்பை அடுத்து இந்திய தூதரகம் சார்பில் உதவி மையங்கள் !

அதிரை நியூஸ்: மார்ச்-26
எதிர்வரும் 29.03.2017 புதன்கிழமை முதல் சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ள 90 நாள் பொதுமன்னிப்பு காலம் துவங்குவதால் இந்தியர்களுக்கு தேவையான உதவிகளையும், வழிகாட்டல்களையும் வழங்கும் உதவி மையங்கள் திறக்கப்படுவதாக சவுதிக்கான இந்தியத் தூதர் அஹமது ஜாவித் மற்றும் துணைத் தூதர் நூர் ரஹ்மான் ஷேக் அவர்களும் ஜித்தாவில் நடைபெற்ற இந்திய தன்னார்வ சேவையாளர்கள் மத்தியில் தெரிவித்தனர்.

மேலும் ஹஜ் மற்றும் உம்ராவிற்கு வந்து சவுதியிலேயே சட்டத்திற்கு புறம்பாக தங்கியோர் பட்டியலில் இந்தியர்கள் யாருமில்லை என்றும், வேலைவாய்ப்பு விசாக்களில் வந்து சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ளோர்கள் வெளியேறுவதற்குரிய உதவிகள் தன்னார்வ உதவியாளர்களின் ஒத்துழைப்புடன் செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.

ஜித்தாவில் மட்டும் 10 உதவி மையங்களும், நாட்டின் பிற பகுதிகளில் 12 மையங்களும் திறக்கப்படுமென்றும், தேவைக்கு ஏற்ப இவ்வுதவி மையங்களின் அதிகரிக்கப்படும். ஜித்தா, மக்கா மற்றும் மதினாவில் ஏற்படுத்தப்படும் உதவி மையங்களை இந்திய துணைத்தூதரகத்தின் நேரடி கட்டுப்பாட்டிலும், ஜஸான், நஜ்ரான், பிஸா ஆகிய பகுதிகளில் சிறப்பு தூதரக அதிகாரிகள் உதவியுடனும், தாயிப்பில் இந்திய கம்யூனிட்டி ஸ்கூலிலும், தபூக், அப்ஹா, கமீஸ் முஷையத் ஆகிய பகுதிகளில் அந்தந்த பாஸ்போர்ட் சேவை மையங்களிலும் உதவி மையங்கள் செயல்படும்.

ஜித்தா மற்றும் அதன் அருகில் வசிப்பவர்களில் பொது மன்னிப்பை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற விரும்பும் ஒரிஜினல் பாஸ்போர்ட் இல்லா இந்தியர்களின் விண்ணப்பங்கள் பரீசிலிக்கப்பட்டு 4 தினங்களில் தற்காலிக பயண அட்டைகள் வழங்கப்படும், தொலைதூர பகுதிகளில் உள்ளவர்களுக்கு 7 முதல் 10 வேலை நாட்களுக்குள் வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

விமான டிக்கெட் எடுக்க வழியில்லாத இந்தியர்களுக்கு உதவுவது மற்றும் தூதரகம் சார்பாக தனி விமானத்தை வாடகைக்கு அமர்த்துவது குறித்து வந்துள்ள கோரிக்கைகளின் மீது சாத்தியக்கூறுகள் பரிசீலிக்கப்பட்டு பின்பு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.