நாம் பலமுறை வருத்தத்துடன் சுட்டிக்காட்டியது போல் உருப்படாத நிர்வாக அமைப்பு மற்றும் மீண்டும் தனியாருக்கு தாரைவார்க்கத் திட்டமிடப்பட்டுள்ளாத கூறப்படும் நிலையில் இந்திய அரசின் விமான நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் ஒட்டுமொத்த இந்தியர்களின் மானத்தையும் நடுவானில் பறக்கவிட்டதுடன் பயணிகளின் சாபத்தையும் பெற்றுள்ளது.
ஹைதராபாத்திலிருந்து டெல்லி வழியாக அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு 324 பயணிகள், 7 குழந்தைகள் மற்றும் 16 சிப்பந்திகளுடன் பறந்த ஏர் இந்தியா விமானத்தில் மொத்தம் 12 கழிவறைகள் உள்ளன. இதில் 4 கழிவறைகள் ஹைதராபாத்திலிருந்து டெல்லி வரும் போதே அடைத்து செயலிழந்துவிட்டது கண்டுபிடிக்கப்பட்டு அதை நைட்ரோஜன் (Nitrogen Flush) செலுத்தி அடைப்புக்களை சுத்தப்படுத்தும் முறையும் தோல்வியில் முடிந்துள்ளது. எனினும், 8 கழிவறைகளை வைத்துக் கொண்டு சுமார் 340 பயணிகள் சமளித்துக் கொள்ள முடியும் என்ற குருட்டு தைரியத்தில் மாற்று விமானம் ஏற்பாடு செய்யாமல் சுமார் 16 மணிநேர இடைநில்லா பயணத்திற்கு ஏர் இந்தியா அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.(The plane was released under minimum equipment list - MEL (meaning with an issue that can be tackled later)
அட்லாண்டிக் பெருங்கடலின் மீது பறந்து செல்லும் போது அதாவது சிகாகோ நகரை நெருங்க இன்னும் 2 மணிநேரங்கள் இருக்கும் நிலையில் எஞ்சிய 8 கழிவறைகளும் பயன்படுத்த முடியாத அளவுக்கு நிரம்பி வழிய பயணிகள் அனைவரும் நீண்ட வரிசையில் கழிவறை முன் காத்து நின்றும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மீண்டும் டெல்லிக்கு திரும்புமுன் விமானத்தின் அனைத்து கழிவறைகளும் சுத்தம் செய்யப்படும் என ஒரு அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
அதேவேளை பயணிகளின் பொறுப்பற்றதனத்தையும் சொல்லியே ஆகவேண்டும், கழிவறைக்குள் பிளாஸ்டிக் பாட்டில்கள், சானிட்டரி நாப்கின்கள், டிஷ்யூ பேப்பர்களை போட வேண்டாம் என எழுதியிருந்தாலும் பயணிகளில் பலர் அதை சட்டை செய்யாமல் போடுவதால் பிற பயணிகள் இப்படிப்பட்ட சங்கடங்களை சந்திக்க நேரிடுகிறது.
Sources: Times of India / Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்
ஏர் இந்திய நிறுவனம் தன் தவறை சரிபண்ணிடும்., அதிரை நியூஸ் என்று பெயரை வைத்துக்கொண்டு துபாய் நியூஸ் போடுவது அதிரையருக்கு பெருமையா., ஒரே நேரத்தில் 104 சாட்டலைட் விண்ணில் செலுத்தியது இஸ்ரோ அதனை பாராட்ட மனமில்லாதவர் அமீரகத்தின் 1. நைப் என்ற சாட்டலைட் பற்றி பெருமையாக எழுதுகிறார். தன் நாட்டையும் நேசிக்க வேண்டும் வாய்ப்பு கொடுக்கும் நாட்டையும் போற்ற வேண்டும். கற்றதும் - பகிர்வதும்.
ReplyDelete