.

Pages

Sunday, March 19, 2017

வெளிநாட்டினர் அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்காதீர் ! குவைத் பாராளுமன்றத்திற்கு கோரிக்கை

அதிரை நியூஸ்: மார்ச்-19
குவைத்தில் பணியாற்றும் வெளிநாட்டினர் தாயகத்திற்கு அனுப்பும் பணத்தின் மீது வரி விதிக்க வேண்டும் என குவைத் பாராளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பியதை தொடர்ந்து,

100 குவைத் தினார் வரை 2 சதவிகிதமும், 100 முதல் 499 தினார் வரை 4 சதவிகிதமும், 500 மற்றும் அதற்கு மேல் அனுப்புவோருக்கு 5 சதவிகிதமும் வரி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது, இன்னும் சட்டமாக்கப்படவில்லை.

இந்நிலையில், குவைத்தில் செயல்படும் அனைத்து எக்ஸ்சேஞ் கூட்டமைப்பின் சார்பாகவும், கள நிலையை தீவிரமாக ஆய்ந்து பார்க்காமல் இத்தகைய சட்டங்களை பரிந்துரைக்கவோ, சட்டமாக இயற்றவோ முன்வர வேண்டாம் என்றும், இதன் பின்விளைவுகளையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், இத்தகைய வரி விதிப்புக்கள் குவைத் நாட்டினரையே நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெளிநாட்டினர் அனுப்பும் பணத்தின் மீதான வரிவிதிப்பு கள்ளப்பண மார்க்கெட் வளர்ச்சிக்கே பயன்படும். மேலும் பல திறமையான ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறி இதுபோன்ற வரிவிதிப்புக்கள் இல்லாத நாட்டிற்கு குடிபெயரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய வரி விதிப்புக்களுக்கு பதிலாக, இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் தயாரிப்புக்கள் மற்றும் அதன் பயன்பாட்டிற்கு மக்களை ஊக்கப்படுத்தும் திட்டங்களை அரசு கண்டறிய வேண்டும் என்றும் ஆலோசணை கூறியுள்ளனர்.
* File Image
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.