.

Pages

Wednesday, March 22, 2017

உலக தண்ணீர் தினம்: அதிரையில் என்.சி.சி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி !

அதிராம்பட்டினம், மார்ச்-22
உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை ( என்.சி.சி ) சார்பில் விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பேரணியை பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் எஸ்.நாகராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணி பள்ளி வளாகத்தில் தொடங்கி அதிரை ஈசிஆர் சாலை வரை சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. இப்பேரணியில், பள்ளி மாணவர்கள் மழைநீர் சேகரிப்பு, நிலவளம், நீர் வளம், வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் போன்ற பதாகைகள் கையில் ஏந்தியவாறு விழிப்புணர்வு கோஷங்கள் கூறியபடி சென்றனர்.

பேரணியை பள்ளி தேசிய மாணவர் படை பொறுப்பாளர் முனைவர் ஆ. அஜ்முதீன் நடத்தினார். இப்பேரணியில் பள்ளி ஆசிரியர்கள் வேணுகோபால், அசரப் அலி மற்றும் பள்ளி தேசிய மாணவ படையினர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.