.

Pages

Friday, March 24, 2017

அதிரையில் மீனவர் வலையில் சிக்கிய 10 அடி நீளமுள்ள அறிய வகை மீன் ! ( படங்கள் )

அதிராம்பட்டினம், மார்ச்-24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் நேற்று இரவு மீன் பிடிக்க படகில் கடலுக்குச் சென்றார். இவரது வலையில் 10 அடி நீளமுள்ள 'சேனை பாம்பு' என அழைக்கப்படும் அறிய வகை  குழுவி மீன் சிக்கியது. சுமார் 7 கிலோ எடை கொண்ட இந்த மீனை அதிராம்பட்டினம், கடைத்தெரு பெரிய மார்க்கெட்டில் காட்சிக்கு கொண்டுவந்தனர். இந்த அறிய வகை மீனை பலரும் அதிசயமாக பார்வையிட்டுச் சென்றனர்.

இதுகுறித்து மீன் வியாபாரி முகைதீன் கூறுகையில்;
'மீன் இனத்தை சேர்ந்தது. கடலில் வாழக்கூடியது. மருத்துவ குணமுடையது. உடலில் உஷ்னத்தை குறைத்து குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. இடுப்பு வலியை போக்கும். பலரும் விரும்பி சாப்பிடுவார்கள்' என்றார்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.