.

Pages

Tuesday, March 21, 2017

உம்மல் குவைனை தொடர்ந்து அஜ்மானிலும் அதிரடி ஆஃபர் அறிவிப்பு!

அதிரை நியூஸ்: மார்ச்-21
எதிர்வரும் 20 ஆம் தேதி சர்வதேச மகிழ்ச்சி தினம் கடைபிடிக்கப்படவுள்ளதை தொடர்ந்து அமீரகத்தின் உம்மல் குவைனில் போக்குவரத்து குற்றத் தொடர்பில் விதிக்கப்பட்ட அபராதங்கள் மற்றும் முடக்கி வைக்கப்பட்ட கார்களை அன்று ஒரு நாள் மட்டும் 50 சதவிகித அபராதத்தை மட்டுமே செலுத்தி மீட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்ததை அறிவீர்கள்.

தற்போது அஜ்மான் போலீஸூம் தன் பங்கிற்கு போக்குவரத்து குற்றத் தொடர்பில் சர்வதேச மகிழ்ச்சி தின அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த மாதம் (மார்ச் 31) வரை முடக்கி வைக்கப்படும் வாகனங்களுக்கான அபராதங்களை உடனுக்குடன் செலுத்தி தங்களுடைய கார்களை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே உடன் விடுவித்து கொள்ளலாம் என அஜ்மான் போலீஸார் சலுகை அறிவித்துள்ளனர்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.