தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி 62-வது நிறுவனர் நாள் மற்றும் கல்லூரி ஆண்டு விழா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி நிர்வாகி சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம். தணிகாசலம் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன் கல்லூரி ஆண்டரிக்கை வாசித்தார். இதில் கல்லூரி மாணவர்கள் நடப்பாண்டில் நிகழ்த்திய சாதனைகளை குறிப்பிட்டுப் பேசினார்.
முன்னதாக கல்லூரி வணிக ஆட்சியியல் துறை பேராசிரியர் முகமது சித்திக் வரவேற்றுப் பேசினார்.
சிறப்பு விருந்தினர்களாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் (பொ) ஆர். திருமுருகன் கலந்துகொண்டு நிறுவனர் நாள் விழா உரையாற்றினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் எஸ். முத்துக்குமார் கல்லூரி நாள் விழா பேரூரையாற்றி பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற 20 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். மேலும் கல்லூரியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது மற்றும் நூறு சதவிகிதம் கல்லூரிக்கு வருகை புரிந்த 150 மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் மேஜர் முனைவர் எஸ்.பி கணபதி தொகுத்து வழங்கி, விழா முடிவில் நன்றி கூறினார். இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
Nice
ReplyDeleteNice
ReplyDelete