கோப்புப்படம் |
தமிழ்நாடு அரசு கோழிப்பண்ணைத் தொழிலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ‘’ கோழி அபிவிருத்தித் திட்டத்தினை’’ ரூ. 18.75 கோடி செலவில் 2017 – 2018ம் ஆண்டிற்கு செயல்படுத்த ஆணை வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தணு;சாவ+ர் மாவட்டத்திற்கு 160 நாட்டுக் கோழிப் பண்ணைகள் அமைக்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் விவசாயிகள் / தனிநபர் தொழில் முனைவோர் / சுய உதவிக்குழுக்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட தகுதியானவர்கள். கோழிப்பண்ணை அமைக்க போதிய நிலம் விண்ணப்பதாரர் பெயரிலோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர் பெயரிலோ இருத்தல் வேண்டும். கோழி வளர்ப்பில் முன் அனுபவம் உள்ளவர்களும், கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
பயனாளிகள் தங்கள் சொந்த முதலீட்டில் அல்லது வங்கி மூலம் கடன் பெற்று இத்திட்டத்தின் மூலம் கோழிப்பண்ணை அமைக்கலாம்.
நாட்டுக்கோழிப்பண்ணை 160 வரை அமைப்பதற்கான கோழிக்கொட்டகை கட்டும் பணி, உபகரணங்கள், கோழித்தீவனம், கோழிக்குஞ்சுகள் வாங்குதல், அசோலா உ ற்பத்தி போன்றவை அமைக்க ஆகும் மொத்த செலவில், 25 சதவீதம் முன் மானியம் தமிழக அரசு வழங்குகின்றது.
தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவர் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பயிற்சி மையங்களில் 3 நாட்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும்.
மேற்கூறிய தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் வங்கியிலிருந்து ஒப்புதல் கடிதம் அல்லது சொந்த நிதிக்கானச் சான்றுடன் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை / உதவி இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை அவர்களிடம் 05-07-2017 தேதிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.