காரைக்குடி - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் வரும் டிசம்பரில் முடிவடையும் என்றார் தென்னக ரயில்வேயின் முதன்மைப் பொறியாளர் காளிமுத்து.
பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிடுவதற்காக சனிக்கிழமை வந்திருந்த அவரை பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் என். ஜெயராமன், பொருளாளர் எஸ்.சுந்தர்ராஜுலு, நிர்வாகிகள் ஷேக்பரீது, பாலசுப்பிரமணியன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
அப்போது காரைக்குடி பட்டுக்கோட்டை வழித்தடத்தில் நடைபெற்று வரும் அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதிரைநியூஸ் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை முழுமையாக செய்ய வேண்டும். ரயில் நிலைய வளாகத்தில் சங்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அப்போது அவர்களிடம் பேசிய முதன்மைப் பொறியாளர் காளிமுத்து, 'காரைக்குடி - பட்டுக்கோட்டை வழித்தடத்தில் 75 கி.மீ தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இப்பணிகளை வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடித்து, ரயில் இஞ்சினைக் கொண்டு சோதனை ஓட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு சிறந்த முறையில் அடிப்படை வசதிகள் செய்யப்படும்' என்றார்.

அப்ப நம்ம ஊர்?
ReplyDeleteஅப்ப நம்ம ஊர்?
ReplyDelete