காரணமாக இருந்த வணிக வளாகக் கடைகளுக்கு ரூ.23 ஆயிரத்தை
மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அபராதம் விதித்தார். அபராதத் தொகைகளை உடனடியாக வசூலிக்க மாநகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (15.10.2017) ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொண்டு 6 வணிக வளாகங்களில் சோதனை செய்யப்பட்டதில் கொசுப்புழுக்கள் இருப்பதை கண்டறிந்து 6 வணிக கடைகளுக்கு ரூ.23,000 அபராதம் விதித்தார். (3 உணவகத்திற்கு தலா ரூ.5,000, டீக்கடைக்கு ரூ.5,000 மற்ற டீக்கடைக்கு ரூ.2,000 மற்றுமொரு டீக்கடைக்கு ரூ.1,000). மேல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படாததால் அக்குடிநீர் தொண்டிகளை துண்டிக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அபராதம் விதிக்கப்பட்ட வணிக வளாக கடைகளுக்கு சுகாதாரமற்ற முறையில் இருப்பது கண்டறியப்பட்டால்ää கடை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
பின்னர், அரசு விரைவு பேருந்து பனிமனை பகுதிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரசு விரைவு போக்குவரத்து கழக பயணிகள் காத்திருப்பு அறை, கழிவறைகள் ஆகியவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து கரந்தை போக்குவரத்து டிப்போ அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றிடவும், கொடிமரத்துமூலை அகழியில் உள்ள குப்பைகள், முட்புதர்கள் சுத்தம் செய்ய மாநகராட்சி அலுவலர்கள் அறிவுறுத்தினார். மாநகராட்சி பகுதிகளில் 325 கூடுதல் பணியாளர்களை கொண்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலவீதி, மூலஆஞ்சயநேயர் கோவில் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில், அதனையொட்டியுள்ள அகழிகளில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். அவ்வாறே சீனிவாசபுரம், பாரதி நகர் குடியிருப்பு பகுதிகளிலும் டெங்க ஒழிப்பு நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களிடம் 3 நாட்களுக்கு மேல் தண்ணீர் பிடித்து வைக்கக் கூடாது எனவும், பாத்திரங்களை முறையாக கழுவி குடிநீர் பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இவ்வாய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாநகராட்சி ஆணையர் வரதராஜ், செயற்பொறியாளர் ராஜ்குமார், உதவி செயற்பொறியாளர்கள் கார்த்திகேயன், ரமேஷ், திருமதி.முத்துலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.




டெங்கு விளிப்புணர்வு பரவட்டும்
ReplyDelete